search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானா சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி வெளியிட்ட 5 வாக்குறுதிகள்
    X

    அரியானா சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி வெளியிட்ட 5 வாக்குறுதிகள்

    • இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களம் காண்கிறது.
    • பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

    வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    எனவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி என 4 முனை போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்ற 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×