என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வினேஷ் போகத்தை அரியானா ராஜ்யசபா எம்.பி. ஆக்க காங்கிரஸ் திட்டம்: பூபிந்தர் சிங் ஹூடா
- உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
- இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.
சண்டிகர்:
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.-
பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுத நீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இன்று அரியானாவில் ஒரு ராஜ்யசபா இருக்கை காலியாக உள்ளது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தால் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
#WATCH | Former Haryana CM Bhupinder Singh Hooda says, "...There should be an investigation into what was the reason for disqualifying Vinesh Phogat. Today a Rajya Sabha seat is vacant (in Haryana). If I had the majority, I would have sent her to the Rajya Sabha..." pic.twitter.com/CzxHf1oWzE
— ANI (@ANI) August 8, 2024