என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்.
இந்நிலையில், தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தண்னி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான அரியானாவில் ஒரு இடத்தை கூட வெல்லமுடியாத ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார்.
- கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன.
ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது .
அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்னதாக கருத்துக்கணிப்புகளின்படி மெகபூவாவின் கட்சி 7 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் அவர் கிங் மேக்கராக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
இதனால் என்சிபி தலைவர் பரூக் அப்துல்லாவும் நேற்றைய தினம் மெகபூபா கட்சிக்கு தங்களுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரங்கள் பிடிபி கட்சி தோல்வி முகத்தில் இருப்பதையே பிரதிபலிக்கிறது.
குறிப்பாக பிடிபி கட்சி சார்பில் ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா [36 வயது] தோல்வி முகத்தில் உள்ளார். தான் கடுமையாக உழைத்ததாகவும், இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார். இல்திஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி உள்ள பஷீர் அமது வீரி வெற்றி முகத்தில் உள்ளார்.
பஷீர் அமது வீரி 31292 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 22534 வாக்குகள் பெற்று அவரை விட 8758 வாக்குகள் வித்தியாசத்தில் இல்திஜா பின்தங்கியுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நபர் வெரும் 3468 வாக்குகள் மட்டுமே பெற்று 27824 வாக்குகள் பின்தங்கியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 5 இடங்களைத் தாண்டி மெகபூபாவின் பிடிபி கட்சி வெற்றி பெறாது என்று கூறப்படுகிறது.
இதற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 25 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்து மெஹபூபா முதலமைச்சர் ஆனார். ஆனால் அதற்கு பின்னர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கி சிறப்பு அந்தஸ்தை பாஜக நீக்கியதே இந்த தேர்தலில் இரண்டு கட்சிக்கும் பலத்த அடியாக அமைந்துள்ளது.
- தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
புட்காம் தொகுதியில் 7 சுற்றுகள் முடிவில் உமர் அப்துல்லா 8612 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார். சுந்தர்பால் தொகுதியில் 7 சுற்றுகளில் 5958 ஓட்டுகள் கூடுதல் பெற்றுள்ளார்.
இதற்கிடையே உமர் அப்துல்லா கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் என்ன முடிவு எடுத்தாலும் பிற்பகலில் தெளிவாகிவிடும். தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக இருந்தால் அக்கட்சி குறுக்குவழியில் ஈடுபடக் கூடாது.
5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இடங்களை நிரப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எங்கள் வக்கீல் ஒருவர் கூறியுள்ளார் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜனதா 26, மெகபூபாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி-3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு-2, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தார்.
- பா.ஜ.க, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.
- வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கு பா.ஜ.க, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.
பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெற்றுள்ள முதலாவது சட்டசபை தேர்தல்கள் இவை என்பதால் இவற்றின் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், 90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி - 47 இடங்களிலும், பாஜக- 28 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.
- அனைவரும் மாநில மக்களின் வளர்ச்சி என்ற ஒரே விஷயத்திற்காக பணியாற்றுகிறோம்.
தேர்தல்!
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடந்து முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
கருத்துக்கணிப்புகள்
இதில் காங்கிரஸ்- உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறுகின்றன.
கிங் மேக்கர்
அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மெகபூபாவின் மக்கள்ஜனநாயக கட்சி 5 முதல் 7 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் மெகபூபா முப்தி கிங் மேக்கராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் மெஹபூபாவின் கட்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.சி.பி. அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பு
இதுகுறித்து நேற்றைய தினம் பேசிய பரூக் அப்துல்லா, நாங்கள் தேர்தலில் போட்டியாளராக இருந்தாலும் அனைவரும் மாநில மக்களின் வளர்ச்சி என்ற ஒரே விஷயத்திற்காக பணியாற்றுகிறோம். எனக்கு கூட்டணிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என உறுதியாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் சுயேச்சைக்களையும் அணுகுவோம் என்று அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நிலவரம்
இந்த அழைப்பை ஏற்று மெகபூபா கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸ் தலைமையான கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் கட்சி மற்றும் பெரும்பான்மையான சுயேட்சைகளும் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்காடுகிறது. அதே நேரம் துணை நிலை ஆளுநரின் 5 எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை 46 இல் இருந்து 48 ஆக அதிகரித்துத் தொங்கு சபை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
- ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது
- துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே துணை நிலை ஆளுநர் மூலம் 5 எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய பாஜக தலைமையிலான அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று காங்கிரஸ்- என்.சி.பி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டங்களைத் தெரிவித்து வருகிறன.
அதிகாரம்
ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு சமீபத்தில் மத்திய அமைச்சகத்தால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதன்படி துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோர் இட ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரத்தை பெரும் இவர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர்.
புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கலாம்.எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல்..க்களை கைவசம் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆளுநரின் இந்த அதிகாரத்துக்கு முன்பே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
பெரும்பான்மை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற முடிவுகளும் வெளியாகியுள்ளது சுயேட்ச்சைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் காங்கிரஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 தொகுதிகளைப் பிடித்துவிடக்கூடும்.
இதைத் தடுப்பதற்காகவே துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது பாஜக. ஆளுநர் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 46 இல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் இது தொங்கு சட்டசபை ஏற்பட வழிவகை செய்து பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
- ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன
- ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.
அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தாலும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டாம் என்று எம்.பி. இன்ஜினியர் ரஷீத் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.), அப்னி கட்சி மற்றும் பிற கட்சிகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். எதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், மற்ற அனைத்து கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தர எங்களது அவாமி இத்தேஹாத் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியர் ரஷீத் தெரிவித்தார்.
- ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
- ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.
அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதுபோல துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நாங்கள் 35 இடங்களில் வெற்றி பெறுவோம். சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் எப்படியும் 15 இடங்களை வெல்வார்கள். அவர்களிடம் கூட்டணி அமைத்து நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்திக்கும். பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
- வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
- காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தோ்தல் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீநகர்:
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடை பெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலை யில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் போட்டியிட்ட நிலையில், இவை சில தொகுதிகளில் வெல்லக் கூடும். ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட கிடைப்பதே கடினம் என்று கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.
அரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதை யொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகு திகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதி களில் தோ்தல் நடைபெற்றது.
மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. சமீபத்திய பாராளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட (58.58 சதவீதம்) இது அதிகமாகும்.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.
20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் தோ்த லில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி யாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.
அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதி கள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதுபோல 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
- ஜம்மு காஷ்மீரில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்து.
- ஏழு மணி நிலவரப்படி 65.58 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்து. 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது ஜனநாயக உரிமையான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
கடைசி கட்ட வாக்குப் பதிவின் போது இன்றிரவு 7 மணி நிலவரப்படி 65.58 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்றைய வாக்குப் பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்றைய வாக்குப் பதிவின் போது உதம்பூரில் அதிகபட்சமாக 72.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்நது சம்பாவில் 72.41 சதவீதமும், கத்துவாவில் 70.53 சதவீதமும், ஜம்முவில் 66.79 சதவீதமும், பந்திபோராவில் 64.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- பஞ்சாப் மாநிலத்தில் இருந்து துப்பரவு பணிக்காக 1957-ல் அழைத்து வரப்பட்டவர்கள்.
- சட்டப்பிரிவு 370 ரத்துக்கு முன் வாக்குரிமை, நிலம் வாங்கும் உரிமை, வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இந்த தேர்தலில் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது ஜனநாயக உரிமையான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இது ஒரு வரலாற்று தருணம் என அவர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். 1957-ம் ஆண்டு மாநில அரசால் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்புரில் இருந்து துப்புரவு பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள்தான் இந்த வால்மிகி சமூகத்தினர்.
"நான் எனது 45 வயதில் முதன்முறையாக வாக்களித்துள்ளேன். முதன்முறையாக ஆர்வத்துடன் வாக்குமையம் வந்து வாக்களித்துள்ளோம். இது ஒரு த்ரில்லான அனுபவமாக உள்ளது. இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய திருவிழா போன்று உள்ளது" என ஜம்முவில் வாக்களித்த காரு பாத்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் சமூகத்தினருக்கு குடியுரிமை பாதுகாப்பு பெற 15 வருடங்கள் முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்த காரு பாத்தி "ஒட்டுமொத்த வால்மிகி சமூகத்தினருக்கும் இது ஒரு திருவிழா. 80 வயது தாத்தா முதல் 18 வயது இளைஞர் வரை இன்று வாக்களித்துளோம். இரண்டு தலைமுறையினருக்கு இங்கு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, குடியுரிமை கிடைத்தது. எங்களுக்கான நீதி வென்றது.
பல தசாப்பதங்களாக எங்களுடைய சமூகம் துப்புறவு பணிக்காக இங்கு அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன" என்றார்.
வால்மிகி சமூகத்தினருடன் மேற்கு பாகிஸ்தான் அகதிகள், குர்கா சமூகத்தினர்கள் என சுமார் 1.5 லட்சம் பேர் உள்ளனர். ஜம்மு, சம்பா, கத்துவா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். முக்கியமாக எல்லைப் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சுமார் 12 ஆயிரம் பேர் காந்தி நகர் மற்றும் டோக்ரா ஹால் பகுதிகளில் வசித்து வருகின்றனர். வாக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமை போன்ற உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டது.
- ஜம்மு பிராந்தியத்தில் 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு.
- ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.