search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஜம்மு காஷ்மீர் தேர்தல்:  துணை நிலை ஆளுநரின் புதிய அதிகாரம்.. இதை செய்தால் போதும் - பாஜக பலே வியூகம்!
    X

    ஜம்மு காஷ்மீர் தேர்தல்: துணை நிலை ஆளுநரின் புதிய அதிகாரம்.. இதை செய்தால் போதும் - பாஜக பலே வியூகம்!

    • ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது
    • துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே துணை நிலை ஆளுநர் மூலம் 5 எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய பாஜக தலைமையிலான அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று காங்கிரஸ்- என்.சி.பி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டங்களைத் தெரிவித்து வருகிறன.

    அதிகாரம்

    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு சமீபத்தில் மத்திய அமைச்சகத்தால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதன்படி துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோர் இட ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படுகின்றனர்.

    இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரத்தை பெரும் இவர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர்.

    புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கலாம்.எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல்..க்களை கைவசம் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆளுநரின் இந்த அதிகாரத்துக்கு முன்பே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

    பெரும்பான்மை

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற முடிவுகளும் வெளியாகியுள்ளது சுயேட்ச்சைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் காங்கிரஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 தொகுதிகளைப் பிடித்துவிடக்கூடும்.

    இதைத் தடுப்பதற்காகவே துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது பாஜக. ஆளுநர் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 46 இல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் இது தொங்கு சட்டசபை ஏற்பட வழிவகை செய்து பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×