search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பகண்டை கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளையனார்குப்ப த்தை சேர்ந்த கணேஷ் மகன் வெங்கடேசன்(வயது38) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை ேபாலீசார் கைது செய்தனர். இதே போன்று சின்னக்கொள்ளியூரை சேர்ந்த முனுசாமி(58) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ரூ. 4 லட்சம் மதிப்பு ள்ள பொருட்களை மர்ம நபர்களை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி செல்வி(வயது52). காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் நேற்று மதியம் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் துணிகள் போன்ற மொத்தம் ரூ. 4 லட்சம் மதிப்பு ள்ள பொருட்களை மர்ம நபர்களை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கிணறு வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த மதி என்பவரிடம் ஒப்பந்தம் செய்தார்.
    • ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராஜபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது68) விவசாயி. இவர் தனது நிலத்தில் புதியதாக கிணறு வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த மதி(58) என்பவரிடம் ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில் கிணறு வெட்டும் பணியை மதி காலதாமதம் செய்ததால், கிணறு வெட்டும் பணியை மாரி வேறு நபருக்கு கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதி குடும்பத்தினர் மாரியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதி, மற்றும் அவரது மகன்கள் அஜித்(32), வல்லரசு(20) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார்.
    • குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் பகுதியை சேர்ந்த வர் வெங்கடேசன்(வயது42). இவரது மனைவி பராசக்தி(32). சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பணி பிடிக்காத வெங்கடேசன், தான் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த வெங்கடேசன் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பராசக்தி கொடுத்தபுகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து வெங்க டேசனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது.
    • நிறுத்திய கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுக்கா பூ.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது. இதனால் பயந்து போன ஒரு சிலர் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மினி பஸ் மீண்டும் வரும் வரை சாலையிலேயே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மினி பஸ் அதே சாலையில் வந்தது. அதனை நிறுத்திய இந்த கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும், பஸ்சின் ஹாரனை அடித்து நொறுக்கினர். இது குறித்து மினி பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவப்பிரகாசம், அவருடன் வந்த 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்
    • உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வரிசையில் வரச் சொன்ன விற்பனையாளர் ராமர் என்பவர் மீது இரண்டு வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வாலிபர்களை அடையாளம் கண்டனர். அதன்படி, உளுந்தாண்டவர் கோவில் காலனியை சேர்ந்த அஜய் (வயது 32), செங்குறிச்சியை சேர்ந்த பூமிநாதன் (20) தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்.இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், இளங்கோவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் கண்டாச்சிபுரம் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி(20) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த பால்ராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்த மெல்கியோர் (68) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூபாய் 4 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார்கைது செய்தனர். மேலும் பால்ராஜ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ராமர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார்.
    • ஊழியர் ராமரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார். இவர் நேற்று மாலை வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியை செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரிசையில் நிற்காமல் வந்தனர். தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்கள்.

    அப்போது பணியில் இருந்த ராமர், வரிசையில் வரும்படி கூறினார். இதையடுத்து வரிசையில் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள், எங்களையே வரிசையில் வர சொல்கிறாயா எனக் கேட்டு ஊழியர் ராமரை தாக்கினர். 

    இதில் காயமடைந்த ராமரை, அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை க்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து. 2 வாலிபர்களை அடை யாளம் கண்டனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், பெட்ரோல் பங்க் விற்பனையாளரை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி க்கொண்டு தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூகையூர் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ரெயில்வே கேட்டில் நின்ற கொண்டிருந்த லாரி பின்னால் வந்தது.

    லாரி ஓட்டுனர் பிரேக் போட முயற்சித்தும், லாரி நிற்காமல் பின்நோக்கி சென்றது. இதனைக் கண்ட சின்னதுரை, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார். லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிய மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. எகிறி குதித்ததில் சின்னதுரையும், அவரது தாயாரும் லேசான காயங்களு டன் உயிர்தப்பினர். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடக்கீரனூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 52) தொழிலாளி. இவர் வடபொன்பரப்பி காப்புக்காடு எதிரே உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் இருந்த ஒரு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாதிக்பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்பாஷா தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சோழத்த ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த 27 வயது பெண்ணை கடந்த 2017-ல் இருந்து காதலித்துள் ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறத்தி னார். தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வ தாக உறுதி கூறிய லெனின், இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்படு கிறது.

    கடந்த மார்ச் மாதம் லெனின் அக்காவிற்கு திரு மணம் நடந்துள்ளது. இருந்த போதும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த இளம்பெண், சேத்தியாத் தோப்பு மகளிர் போலீ சாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்வ தாக போலீசாரிடம் லெனின் உறுதியளித்துள் ளார். இதையடுத்து அந்த இளம்பெண் லெனினை தொடர்பு கொண்டு கேட்ட போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஊரை விட்டு வெளியூ ருக்கும் சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப் பட்ட இளம்பெண், சேத்தி யாத்தோப்பு மகளிர் போலீ சாரிடம் மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றிய லெனினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×