search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில்  மானிய விைலயில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் கலெக்டர், எம்.எம்.ஏ வழங்கினார்
    X

    உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய உபகரணங்களை கலெக்டர் ஷ்ரவன் குமார், எம்.எல்.ஏ மணிக்கண்ணன் வழங்கிய காட்சி.

    உளுந்தூர்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விைலயில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் கலெக்டர், எம்.எம்.ஏ வழங்கினார்

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
    • இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கினார்.

    உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார். நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையிலான பவர் டில்லர் எந்திரம், தென்ன மரக் கன்றுகள், பழக்க ன்றுகள் கத்திரிக்கன்றுகள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய செய லா ளரும், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவருமான ராஜவேல், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலா ளருமான வைத்தியநாதன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், முன்னாள் மாவட்ட கவு ன்சிலர் விஜ யகுமார், தொல்காப்பியன், பத்ம நாபன், ஒன்றிய கவுன்சி லர்கள் ஜெயக்குமார், பழனிவேல், கணேசன், பாக்கியராஜ், ஆறுமுகம், சண்முகம், சர்தார், மனோகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அரசு அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×