search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • தூசி அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குண்டியாந் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மற்றும் உத்திரமே ரூரை அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பின் னர் அவர்கள் போதையில் நாங்களும் ரவுடிதான் என பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    இதனை அந்த பகுதியில் இருந்த ஏகாம்பரம் மகன் சபேஸ் தட்டிக்கேட்டார். ஆத் திரம் அடைந்த கார்த்திக், அர விந்தன் ஆகியோர் ஆபாச மாக பேசி கையில் வைத்தி ருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பொதுமக்கள் மீது வீசினார் கள்.

    இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு ஒதுங்கவே தீயில் இருந்து தப்பினர். உடனே கிராம மக்கள் 2 வாலி பர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சபேஸ் நேற்று தூசி போலீசில் புகார் செய் தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து கிராமத்தில் ரவுடி தனம் செய்து பெட்ரோல் குண்டு வீசிய கார்த்திக், அர விந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வருகிற 16-ந் தேதி நடக்கிறது
    • வயது வரம்பு கிடையாது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சீனியர் எறிபந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் என மாவட்ட எறிபந்து சங்கம் அறிவித்துள்ளது. 21-வது மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி 28-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 16 -ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைபிள்ளை அரசு பள்ளியில் நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. வீரர்கள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆதார் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் என மாவட்ட எறிபந்து சங்க கவுரவ தலைவர் டாக்டர் அரவிந்குமார், தலைவர் தர்ஷன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • யானையை கண்டவுடன் டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
    • சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை சுற்றி திரிகிறது. போளூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ஒற்றை கொம்பன் காட்டு யானை இன்று காலை வந்தது.

    ஜமுனாமரத்தூர் அருகே அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து நின்றது. யானையை கண்டவுடன் டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.

    இதேபோல் அந்த பகுதியில் சென்ற வாகனங்களும் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினா். சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.

    இதனால் பஸ் உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். பஸ்சுக்குள் இருந்தபடியே யானையை வீடியோ எடுப்பதும், அது எப்படா இடத்தைக் காலிச் செய்யும் என்றும் பயணிகள் காத்துக் கிடந்தனர்.

    நீண்ட நேர விளையாட்டுக்குப் பின்னா் யானை மெதுவாக நடந்துசென்று காட்டுப் பகுதிக்குள் போனது. அதன் பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

    • வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கோவிலில் நடந்தது
    • புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    வந்தவாசி:

    வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ருக்குமணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் இன்றி வெளிமாநில பக்தர்களும் வருகை தந்து ஸ்ரீ பாண்டுரங்கரை வழிபடுவது வழக்கம்.

    வெங்கடேச பெருமானின் அனைத்து வித அலங்கா ரத்தையும் ஒவ்வொரு நாளாக காட்சிப்படுத்துவார்கள். இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ராதையுடன் நீலமேக பட்டுடுத்தி ஸ்ரீ வேணுகோபால் அலங்காரத்தில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த விசேஷ அலங்காரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து சென்றனர்.

    • வனத்துறை சார்பில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனவிலங்கு, மனித மோதல் தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வனச்சர அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணதாசன், வனச்சரக அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலில் காணப்பட்டார்
    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்

    வேட்டவலம்:

    வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிர சாந்த் (வயது 28). இவர் சென் னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி. மகன் தமிழ் அமுதன் (2).

    இந்த நிலையில் பிரசாந்த் கடன் பெற்று இதனால் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பிரச்சினை யாலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    நேற்று காலை பிர சாந்த், வீட்டின் அருகே உள்ள ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட் டைக்கு சென்றார்.

    அங்கு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அந்த பகு தியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரசாந்த் குதித்த கல் குவாரி குட்டையில் இறங்கி அவரை தேடினர்.

    சிறிது நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி, வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுடுகாட்டுக்கு பாதை அமைக்ககோரி நடத்தினர்
    • விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டு க்குப்பாதை அமைத்து தரக்கோரி பாடை கட்டி ஊர்வலமாக வந்து நூதன முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வரு வாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் ஒரு வாரத்தில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர விட்டால் வாக்காளர் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து போ ராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனால் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தனிப்படையினர் சோமந்தாங்கல் கூட்ரோட்டில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வெட்டியாந் தொழுவம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 47) என்பதும், இவர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இவரிடம் இருந்து 100 கர்நாடகா மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் பழனி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவ ட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.

    சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்ய ப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை களை பயன்படுத்தலாம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது.

    சிலைகளுக்கு வர்ணம் பூச நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு அணிவிக்கும் அலங்கார ஆடைகள் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டும் அணிவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்ட இடங்களில் மட்டுமே மாசுக்கட்டு ப்பாட்டு வாரி யத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்று ச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • திருவண்ணாமலையில் போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு
    • முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என தகவல்

    வேங்கிக்கால்:

    தமிழ்நாட்டில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது.

    இந்த தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த சுமன் என்பவரின் மனைவி லாவண்யா பங்கேற்றார்.

    தேர்வின் போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு சென்று செல்போனை பயன்படுத்தி, அதன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விடைகளை பெற்று விடைத் தாளில் குறிப்பிட முயன்ற முறைகேட்டில் லாவன்யா சிக்கினார்.

    இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யாவிற்கு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட அவரது கணவரான சப்- இன்ஸ்பெக்டர் சுமன், அவலூர்பேட்டையை சேர்ந்த சப் - இன்ஸ்பெக்டர் சிவக்குமார், செங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 29-ந் தேதி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு பல்வேறு கட்டுப்பாடு விதிகளுடன் நடைபெறும். தேர்வு நடைபெறும் வளாகத்திற்கு செல்போன் உள்ளிட்ட பொருட்கள் செல்ல அனுமதி கிடையாது.

    பலத்த சோதனைக்கு பின்னர் தான் தேர்வர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தேர்வு மையத்திற்குள் லாவண்யாவிடம் எவ்வாறு செல்போன் வந்தது என்றும், தேர்வு மைய வளாகத்திற்குள் யார் செல்போனை கொண்டு கழிவறையில் வைத்தது என்பன உள்ளிட்ட கேள்விகள் போலீசார் மற்றும் சக தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

    தேர்வின் போது லாவண்யாவை போலீசார் சோதனை செய்ய முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குறிப்பிட்ட சில போலீசார் அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று வெறையூர் போலீசார் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கைதான அவரது கணவர் சுமன், சிவக்குமார், பிரவீன் குமார் ஆகியோரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ.ஆய்வு
    • 50 படுக்கைகள் கொண்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வ ருகிறது. இந்த கட்டிடத்தில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மையம், ஸ்கேன் செய்யும் அறை, இடம்பெற உள்ளது.

    இந்த நிலையில் கட்டிடப் பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திமுக மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணி வேந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    ஆய்வின்போது மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, மருத்துவர்கள் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • சொத்து தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அரசு ஆணை பாளை யத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 33).தொழிலாளி. இவரது தாய்மாமன் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (48).

    இந்த நிலையில் நேற்று ராஜேந்திரனிடம் சரத்குமார் சென்று சொத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை வெட்டியுள்ளார். இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×