search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
    X

    பாடை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்

    • சுடுகாட்டுக்கு பாதை அமைக்ககோரி நடத்தினர்
    • விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டு க்குப்பாதை அமைத்து தரக்கோரி பாடை கட்டி ஊர்வலமாக வந்து நூதன முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வரு வாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் ஒரு வாரத்தில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர விட்டால் வாக்காளர் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து போ ராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனால் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×