என் மலர்
திருவண்ணாமலை
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பில்லாந்தியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 35).இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 வருடமாக சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.
இதைக் கண்ட சுதாவின் தாயார் அவரை மீட்டு நாவல் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாற்றப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுதாவின் தந்தை பெரணமல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி பேசியதாவது:-
மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மணிலாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் மழை நீரை சேமித்து ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை விளைவித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் அதிக விளைச்சலுடன் அதிக லாபத்தையும் ஈட்டலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது.
தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெள்ளானந்தால் கிராமத்தில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துல் மற்றும் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள மையம் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு விநியோகித்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
இந்த மையத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் அதற்கு நல்ல விளை கிடைப்பதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் பேரினார்.
இதில் கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர் சிவக்குமார், விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உலக நன்மைக்காக நடந்தது
- தினமும் யாக பூஜைகள் நடக்கிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை காஞ்சிபுரம் சாலையில் உள்ள காக ஆசிரமத்தில் உலக நன்மைக்காக உத்தம வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான உத்தம வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கொல்லிமலை சித்தர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.
உத்தம வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று காலை சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கியது. யாக பூஜையை தொடர்ந்து அன்ன தானமும், புடவை தானமும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று காலை யாக பூஜையுடன் அன்ன தானமும் வழங்க ப்பட்டது. செப்டம்பர் 6-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பைரவ யாகம், 7-ந் தேதி சித்தர் வேள்வி பூஜையுடன் சாதுக்களுக்கு ஆடை தானமும் வழங்கப்படும். 8-ந் தேதி சிறப்பு யாக பூஜையுடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
உலக நன்மைக்காக நடைபெறும் உத்தம வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பைரவர் அருள் பெறுமாறு காக ஆசிரம நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- உற்சவர் சிலைக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
- திருவீதி உலாவில் பக்தர்கள் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் மேலண்டை தெருவில் வல்லப விநாயகர் கோயிலில் புதிய கொடிமரம், உற்சவர் சிலைக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.
பகலில் விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதன் யாகபூஜைகளை வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ரவிச்சந்திர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், ஒன்றிய கவுன்சிலர் குமார்ராஜா, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, முன்னாள் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
- ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் மாரியம்மன் மற்றும் எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
- பல்வேறு சாதனைகள் செய்துள்ளார்
போளூர்:
போளூர் அடுத்த கசம்பாடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 147 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போளூர் அருகே உள்ள பூங்குளம்மேடு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து கசம்பாடி அரசு பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 வருடங்களாக பணியாற்றும் தலைமை ஆசிரியர் சரவணன் பள்ளியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். பள்ளியின் தரம் உயர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரித்ததோடு, மாணவர்களின் வருகை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இதனால் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இது தொடர்பாக மர்ம நபர்கள் சிலர் பொய்யான புகார் கொடுத்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர்.
எனவே தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் கசம்பாடி அரசு பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
- மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர்.
போளூர்:
போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை போளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அடுத்த வினாடியே மணமகள், எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வீசினாா். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மணமகளிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று கூச்சலிட்டவாறு திரும்ப திரும்ப விடாப்பிடியாக கூறினார். அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார். பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.
பின்னர் உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 3 நாள் வெளியூர் சுற்றுலா சென்று வந்தார்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூர்- ராஜாபாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், விவசாயி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தகவல் தெரிவிக்கா மல் நண்பர்களுடன் 3 நாள் வெளியூர் சுற்றுலா சென்றுவிட்டு ராஜாபாளையம் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ரவிச்சந்திரன், அவரது மனைவி வாசுகி யோர் சதீஷ்குமாரிடம் ஏன் சொல்லாமல் ஊர் சுற்றி விட்டு ஆகி வந்திருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திரு வண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர்போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது
- அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 100-க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்களுடன், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களும், சாதுக்கள் வேடத்தில் தங்கியுள்ளனர். மேலும், கஞ்சா மற்றும் சாராயம் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இவர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்ளிட்டோர், சாதுக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சாதுக்களிடம் உள்ள அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது சொந்த ஊர், பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
- தமிழ் வளர்ச்சிக்கு எந்த அரசாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டும்
- 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குநர் பேரரசு சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது;
தமிழ் வளர்ச்சி என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு எந்த அரசாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டும். 12 வயது சிறுவர்கள் தமிழ் மொழியில் பேசுகிறார்களே தவிர, எழுதவும் மற்றும் படிக்கவும் தெரியவதில்லை.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருந்தால்தான் தமிழ் காப்பாற்றப்படும். 60 சதவீதம் பேச்சு மொழியாகத்தான் தமிழ் மொழி உள்ளது என கூறலாம். இதுவும், எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடக் கூடாது. தமிழ் மொழியை பாதுகாக்க, நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் அழியாது என இருந்துவிடக்கூடாது. 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க தெரியவில்லை.
தமிழ் மொழியை பாதுகாக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பெற்றோரும் துணையாக இருக்க வேண்டும். விருப்ப பாடம் என்பதால், இந்தியை தேர்வு செய்து பிள்ளைகளை படிக்க சொல்கிறார்கள்.
விருப்பப் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. பெற்றோர்தான் நிர்ணயம் செய்கின்றனர். வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேசுவதால், இந்தி மொழியை தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர். வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேசுகின்றனர், எழுத படிக்க தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தி மொழியை விருப்பப் பாடமாக படித்த மாணவர்கள், இந்தி மொழியில் பேசுகின்றனர், எழுதுகின்றனர், படிக்கின்றனர். இது மிகப்பெரிய ஆபத்து தமிழராக இருக்கும் நாம், நமது பிள்ளைகளை தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும், கற்று கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை சரியானதுதான்.
தமிழை கற்றுக் கொண்ட பிறகு இந்தி மொழிக்கு செல்ல வேண்டும். இந்தி மொழிக்கு எதிர்ப்பு மற்றும் இந்தி ஒழிக என்பதால் தமிழ் வளர்ந்துவிடாது.
தமிழ் மொழியை வளர்ப்பது வேறு, இந்தியை புறக்கணிப்பது வேறு. இந்தியை புறக்கணிப்பதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழ் வளர்ச்சிக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழ் மொழி அழியக் கூடாது, வளர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- வழியாக சென்றவர்கள் செங்கம் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் (வயது 25), ஆகாஷ் (20), கவுதம மணிகண்டன்(28).
இவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காக்கனாம்பாளையத்திலிருந்து திருச்சி செல்வதற்காக காரில் புறப்பட்டனர்.
திண்டிவனத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
செங்கம் புறவழிச் சாலையில் லாரியும், காரும் வரும்போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகியோர் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் செங்கம் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் நொறுங்கி இருந்த காரிலிருந்து 3 வாலிபர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகளை காஞ்சிபுரம் சேர்ந்த வாலிபருக்கு கடந்த 23- 3 -2023 அன்று திருமணம் செய்து வைத்தார்.
கடந்த ஆடி மாதத்தில் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் ஆடி மாதம் முடிந்து கணவர் வீட்டிற்கு மகனை அனுப்பி வைக்க தந்தை முடிவு செய்தார்.
புதுபெண் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார். மகளிடம் ஏன் கனவர் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறாய் என்று தந்தை கேட்டுள்ளார்.
கணவர் தன்னிடம் விவாகரத்து கேட்பதாக இளம் பெண் கூறினார். இந்த நிலையில் இளம்பெண்ணின் தந்தை நான் சமாதானம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம்பெண் யாரிடமும் கூறாமல் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். மகள் வீட்டில் இல்லாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் அவரைத் தேடி உள்ளார்.
மகள் கிடைக்காததால் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.