search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 5 திட்டங்கள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்ப டுத்தப்படும் திட்டங்களுக்கு இ- சேவை இணையதளம் வழி யாக மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்திற்கு பிரத்யேக இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய மாற் றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும். கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானியம் விண் ணப்பம், திருமண உதவித் தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை விண்ணப்பம் ஆகிய 5 திட்டங் கள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை இணையதள சேவை மூலம் பயன்படுத்த அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https:/www.tnesevai.tn.gov.in/citizen/registration. aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான ரசீதினை பெற்று கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • 2 பெண்களுக்கு கத்திக்குத்து-பரபரப்பு
    • வாலிபர் கைது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை யில் உள்ள நகராட்சி ஊழி யர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராம்ஜி (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவரது மனைவி சுகுணா (25). சுகுணாவின் தாயார் விஜயா. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்றிரவு ராம்ஜி சுகுணாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனைக் கண்ட விஜயா ஏன் என் மகளிடம் தகராறு செய்கிறார் என்று ராம்ஜிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராம்ஜி விஐயாவிடம் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளினார்.

    விஜயா கீழே விழுவதை பார்த்த விஜயாவின் இளைய மகன் பரணி, ராம்ஜியை தட்டிக் கேட்டுள் ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மைத் துனர் பரணியை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த மாமியார் விஜயா, மைத்துனி கல்கி ஆகியோருக் கும் கத்திக்குத்து விழுந்தது.

    இதில் 3 பேரும் படுகாயங் களுடன் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்து ராம்ஜி தப்பி ஓடினார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.

    ஆனால், வரும் வழியிலேயே பரணி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் விஜயா மற்றும் கல்கி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பரணி, திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குண சேகரன் மற்றும் போலீசார் ராம்ஜியை நேற்றிரவு கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குடும்பத்தகராறில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக் கப்பட்டிருந்தது.

    விளையாட்டு போட்டிகளும் மலை வாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.

    நேற்றுடன் விழா நிறைவடைந்து பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

    அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் தனலட்சுமி வரவேற்றார்.

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறை களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளர்ச்சி பெற்றது. இது வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

    முதன் முதலாக 26 ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலையில் கோடை விழா ஆரம்பித்தது தி.மு.க.ஆட்சியில்தான். மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மினி பஸ் வசதி குடிநீர் வசதி போன்றவை தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான்" என்று கூறினார்.

    கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

    கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 நாட்கள் நடக்கும் இந்த கோடை விழாவில் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விழாவில் மாநில தட கள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.

    • அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கோஷம்
    • திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், ராமச்ச ந்திரன் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும்
    • கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்கி 7 வாரங்கள் நடைபெற உள்ளது.

    64 சக்தி பீடங்களில் ஒன்றாக அம்மன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் சிரசு சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜனாஆகர்ஷன சக்கரமும் அமைந்துள்ளது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சனத்தன்று வெட்டி எடுத்து வரப்படும் மண்ணே இச் சன்னதியில் திருநீராக வழங்கப்படுகிறது.

    இங்கு வழிபாடு செய்தால் 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும் என ஞானியர்கள் கூறியுள்ளனர்.

    ரேணுகம்பாள் கோவிலில் நாளை 21-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 1-ந்தேதி வரை 7 ெவள்ளிக்கிழமைகளில் ஆடிவெள்ளி திருவிழா நடைபெற உள்ளது.

    இதைமுன்னிட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை படவேடு கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

    இவ்விழா நடைபெறும் முதல் வெள்ளி இரவில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலாவும், 2-வது வெள்ளி 28-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்திலும், 4.8.23-ந்தேதி இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்திலும், 4-வது வெள்ளி 11-ந் தேதி நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்திலும், 5-வது வெள்ளி 18-ந் தேதி இரவில் குதிரை வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 6-வது வெள்ளி 25-ந் தேதி முத்து ரதத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், செப் 15-ந் ேததி 7-வது வெள்ளியன்று உற்சவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • போலீசார் புகார்
    • பைக்கை பறிமுதல் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 31) நெல்மண்டியில் மூட்டைத்தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி குப்பை கிடங்கு முன்பு நிறுத்தியிருந்த இவரது பைக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து கமலக் கண்ணன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் வேலூர் கொணவட்டம் மசூதி தெருவில் வசிக்கும் டிரம்ஸ் வேலை பார்க்கும் அருள் மகன் வெங்கடேசன் (17) என்பவர் கமலக் கண்ணன் பைக்கை திருடியது தெரியவந்தது.

    பின்னர் அவரை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

    • 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பவித்ரா (27).

    இவருக்கும் செய்யாறு வட்டம் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சகாதேவன் என்பவருக்கும் கடந்த 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தந்தை முருகேசனுடன் சோழவரம் கிராமத்தில் வசித்து வந்தனர். பவித்ரா கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இறந்த பவித்திராவின் உடலை கைப்பற்றி செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆகி சுமார் நான்கு வருடங்களுக்குள் பவித்ரா இறந்ததால் செய்யாறு சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

    • நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    உலக அளவில் கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை பிரிட்டனைச் சேர்ந்த செக்.ஓ.ஆர்ஜி. அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 மாணவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.

    இந்த 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேச பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா சத்பால் மிட்டல் பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்தி நகர் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவர் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ஸ்ரீ பதம்பத் சிங்கானியா பள்ளி மாணவர் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொகாலி சண்டீகர் பொறியியல் கல்லூரி மாணவர் ரவீந்தர் பிஷ்னோய் (20, ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

    தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவர். இந்த 10 பேரில் இருந்து இறுதி வெற்றியாளர் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.
    • மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள அண்ணாமலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள்.

    சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. நேற்று மகாதீபமலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென்று பரவி சுமார் பல மீட்டர் தூரம் வரை எரிந்தது. தீ விபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கரில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாகி விட்டன. மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    மலையில் தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் புனிதமாக கருதப்படும் அண்ணாமலை மீது தீ வைப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கோலிக்கு அது 500-வது சர்வதேச போட்டியாகும்.

    அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார். ஒட்டுமொத்தமாக 10-வது வீரராக உள்ளார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

    கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் கோலி 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் கோலிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் மனோகரன்.

    இவரது மகள் சத்யா (வயது 19). இவர் வாணியம்பாடியில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள் ளார். இதனால் அவரை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ சார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடை
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி செம்பூர் செல்லும் சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இங்கிருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தக் குழாயின் பழுப்பு லைன் உடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகி ஆறு போல் செல்கிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×