search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மவுசு அதிகரிப்பு
    X

    மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மவுசு அதிகரிப்பு

    • மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அடங்கிய "யுனஸ்கோ" நகரமாக விளங்குகிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் வரலாற்று சிறப்பு பெற்றவை.

    தற்போது சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி, வெளிநாட்டவர் அதிகளவில் வரும் நகரமாக மாமல்லபுரம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட், காற்றாடி திருவிழா போன்ற சர்வதேச விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகள் இங்கு நடந்ததால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் சுற்றுலா திட்டத்தில் மாமல்லபுரம் தான் முதல் பார்வை இடமாக திகழ்கி றது. இதனால் வெளி மாநி லத்தவர்களின் வருகையும் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் பல மொழி பேசும் சுற்றுலா வழி காட்டிகளுக்கு மாமல்ல புரத்தில் மவுசு அதிகரித்து உள்ளது.

    உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மாமல்லபுரத்தில் வழிகாட்டி யார்? அவருக்கு பல மொழிகள் பேச தெரியுமா? அரசு பதிவு பெற்றவரா? என்பதை உறுதி செய்து முன் கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் பல மொழிகள் தெரிந்த சுற்றுலா வழிகாட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த பல மொழி பேசும் வழிகாட்டி வரதன் என்பவரிடம் இதை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாமல்லபுரத்தை ஒரு ஆன்மீகம் மற்றும் வரலாற்று தளமாக பார்க்கிறார்கள். சிற்பங்களை தொட்டு கும்பிடுகிறார்கள். இதை பார்க்கும்போது நம் மாமல்லபுரம் இவ்வளவு புனித பூமியா? என புல்லரிக்கிறது.

    தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது. புராதன சின்னங்களின் வளாகங்களில் மழை, வெயிலுக்கு பயணிகள் ஒதுங்கும் வகையில் நிழல் குடைகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×