என் மலர்
நீங்கள் தேடியது "எதிரொலி"
- பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
- மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.
இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது. சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புலி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
விரைவு படையினர் மற்றும் டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 இடங்களில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 50 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் புலி சிக்கவில்லை. கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் கடந்த 2 வாரங்களாக புலி நடமாட்டம் பற்றி எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து வெளியூர்க ளில் இருந்து வந்த அதிரடி படையினர் திரும்பி சென்றனர். புலி நடமாட்டம் இல்லாததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிற்றாறு பகுதி பொதுமக்க ளுடன் வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது கால்ந டைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தனர்.
மேலும் அந்த பகுதி மக்க ளும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதாவது சிற்றாறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கோதையாறு வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புலி நடமாட்டம் காரணமாக மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் நடந்து வீட்டுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சிற்றாறு காலனி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் பேசினார்கள். தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இன்று அல்லது நாளை முதல் சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
- தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.
கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.
அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது.
- உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
உடுமலை,நவ.30-
உடுமலை மத்திய பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மாலைமலரிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனடியாக பஸ் நிலைய பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி தலைவர் மத்தீன் உத்தரவிட்டார். இதையடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது. அதனை நகராட்சி தலைவர் மத்தீன் பார்வையிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர்.
- நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கோழிப்ப ண்ணையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல்
மாவட்டத்தில் பண்ணையா ளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கி யுள்ளனர்.
இதன்படி நாமக்கல் மற்றும்சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில், கால்நடை பராமரிப்பு துறை யினரின் ஆலோசனைப்படி வெளிநபர்கள் கோழிப் பண்ணைகளுக்குள் நுழை வது தடுக்கப்பட்டுள்ளது. பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் கொண்ட 45 அதிவிரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை களை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என இக்குழு கண்காணிப்பில் ஈடுபட, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் பாஸ்க ரன் உத்தரவிட்டு உள்ளார்.
இதனிடையே பல்ல டத்தில் நேற்று முன்தினம் ரூ.119-ஆக இருந்த கறிக்கோழி விலை, 13 ரூபாய் குறைந்து நேற்று ரூ.106- ஆக இருந்தது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ள நிலையில் மேலும் இந்த விலை குறையும் என கூறப்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பீதிஅடைந்துள்ளனர் .
முட்டை பண்ணை கொள்முதல்விலை 5 ரூபாயாக நீடிக்கிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்ட நிலையிலும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வழக்கம் போல அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது.
- பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள்.
திருவாரூர்:
திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார்பில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியை கேட்டால் காங்கிரஸ் மாடல் என்று சொல்வார்கள். இடது சாரி கட்சி என்று கேட்டால் இடதுசாரி மாடல் என்று சொல்வார்கள்.
ஆர்எஸ்எஸ், பா.ஜனதா கட்சியினர் திராவிட இயக்க அரசியலை தூக்கி எறிவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்த வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என நகர்மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் பேசியதாவது, தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு2 தலைவ ர்கள். ஒன்று மோடியால் நியமிக்க ப்பட்ட அண்ணாமலை, இன்னொருவர் ரவி.
அவரை ஆளுநர் என்று சொல்ல மாட்டேன்.
ஆளுநர் பதவியோடு இருந்தால் ஆளுநர் என்று சொல்லலாம்.
சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று சொல்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை விளக்க செயலாளராக ஆளுனர் இருக்கக்கூடாது.
இவ்வாறு பேசினார்.
திருமாவளவன் பேசியதாவது, திமுக, திராவிடர் கழகம் திராவிட தேசியம் பேசவில்லை.
திராவிட அரசியலை பேசுகிறது. திராவிட அரசியல் என்பது ஆரிய எதிர்ப்பு அரசியல். பிஜேபியையும், ஆர்எஸ்எஸ் யையும் எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில் கூறியதாவது, நாங்கள் கொள்கையில் எரிமலை.
உங்களுக்கு கிடைத்திருக்கிற அந்த பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள். ஏன் அந்த இடத்தில் எச்.ராஜா, சேகர், கணேஷய்யர் இல்லை.
அண்ணாமலை எப்படி தேர்வானார்.
தகுதிக்காகவா, இல்லை. பெரியாருக்கு, திராவிடர் கழகத்திற்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு பயந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பேசினார்.
சேலம்:
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண–வர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதையொட்டி ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்- பரவுனி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12522) நேற்று எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
ஈரோடு-பரவுனி வரை பகுதியாக ரத்து செய்ய–ப்பட்டது, செகந்திராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயில்(17230) சேவை நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் திருவனந்தபுரம்- செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (17229) சேவை நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.