என் மலர்
நீங்கள் தேடியது "எவரெஸ்ட்"
- 2019-ம் ஆண்டில் இருந்து மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை நேபாளம் மேற்கொண்டு வருகிறது
- ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து மொத்தம் 55 நாட்களில் 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
இமயமலையில் அமைந்து உள்ளது உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட். இந்த எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரம் கொண்டதாகும். நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட சிகரத்தில் ஏற உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேறும் வீரர்கள் வருகை தருவார்கள்.
இவர்கள் மலையேற உதவி செய்யும் ஷெர்பாக்களின் உதவியுடன் மலையேறுவார்கள். பலர் எவரெஸ்டின் உச்சிக்கு செல்ல முயன்று குளிர் தாங்க முடியாமல் உயிரிழப்பது உண்டு. அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாது நிலையும் ஏற்படும். இவ்வாறு மீட்க முடியாதவர்களின் உடல்கள் அப்படியே கிடக்கும்.
மேலும், மலையேறும் நபர்களால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை (Mountain Cleaning Campaign) நேபாள அரசு மேற்கொண்டது.
ஆண்டுதோறும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் நேபாள நாட்டின் ராணுவ வீரர்கள் இந்த திட்டத்தை தொடங்கினர். 12 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் 18 பேர் கொண்ட மலையேற உதவி புரியும் குழுவுடன் பயணத்தை மேற்கொண்டது.
55 நாள் பயணத்தின் முடிவில் 11 டன் குப்பைகளை எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றியுள்ளது. மேலும், ஐந்து மனித உடல்கள் மற்றும் ஒரு மண்டை ஓடு ஆகியவற்றையும் அகற்றியுள்ளது.
- தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர்.
- காம்யா என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
ஆனால் தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்
மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் எறியுள்ளார்.
எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது. சிலரால் மட்டும் தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்தது வருகின்றனர்.
இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவதும் தான்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும்.
- 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்.
பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார். அடுத்ததாக நேற்று காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.
பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
- முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.
கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.
உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
- எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
போபால்:
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.
பிரிஷாவின் பூர்வீகம் மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் என்றாலும், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார்.
மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரியும் லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
அதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேசும், தாய் சீமாவும் வழங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார். தனது 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார்.
அந்த வழியில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.
கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு 'போஸ்' கொடுத்தார்.
'இவ்வளவு உயரமான இடத்தை எட்டுவதற்கு பெரியவர்களான மலையேற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்' என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ்.
அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த குட்டிப்பெண், மலையேற்றத்தில் கெட்டிதான்!
- உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது.
- 'இமயமலையை காப்போம்' என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
காத்மாண்டு :
உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. இதன் உச்சிமுடியை எட்டிப்பிடிப்பது அரிய சாகச செயலாக கருதப்படுகிறது.
1953-ம் ஆண்டு மே 29-ந்தேதியன்று, நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், நேபாள நாட்டின் டென்சிங் நார்கேயும் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர்.
அதன் 70-வது ஆண்டுவிழாவையொட்டி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு உதவும் ஆயிரக்கணக்கான ஷெர்பா இன வழிகாட்டிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். 'இமயமலையை காப்போம்' என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த பல உள்நாட்டு, வெளிநாட்டு மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கான ஷெர்பா வழிகாட்டிகளும் நேபாள அரசால் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு, வெள்ளியாலான, எவரெஸ்ட் சின்னம் பொறித்த 'பேட்ஜ்'களும் வழங்கப்பட்டன. எவரெஸ்டில் முதல்முறையாக காலடி பதித்த ஹிலாரி, டென்சிங் குடும்பத்தினருக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹிலாரி கடந்த 2008-ம் ஆண்டும், டென்சிங் கடந்த 1986-ம் ஆண்டும் இறந்துவிட்டனர். அவர்களுக்குப் பின் கடந்த 70 ஆண்டுகளில், பல நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 621 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கின்றனர்.