என் மலர்
நீங்கள் தேடியது "கண்கள்"
- பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். கண்கள் இல்லையெனில் நம்மால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்து முடிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
* கண்களை பாதுகாக்க கீரை உணவுகளை வாரம் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
* கண்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும்.
* கண்களின் பாதுகாப்புக்கு தினந்தோறும் கண்களை மூடி, மெதுவாக விரல் நுனிகளால் கண் இமைகளை அழுத்தி விட வேண்டும். இப்படி தினமும் 10 முறை செய்ய வேண்டும். இது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளை தூண்டி, கண்ணீர் சுரப்பதை அதிகரிக்கும்.
* ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இது கண்களின் தசைகளை தளர்த்தி, கண் அழுத்தத்தை குறைக்கும்.
* வெளியில் செல்லும்போது, சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். காற்று அதிகமாக வீசும்போது, கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும். கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, கண் ரத்த அழுத்தத்தை குறைத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு ஓய்வு அளித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது, கண் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும்.
- காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது.
- சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களை பாதுகாக்கிறது.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன், ரத்தத்தின் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் கண்ணில் உள்ள கருவிழிகளுக்கு மட்டும் ரத்தம் பாய்வதில்லை. பின்பு எப்படி தேவையான ஊட்டச்சத்து கண்களுக்கு கிடைக்கிறது என்று தெரியுமா?
கண்ணீர் மூலமே ஊட்டச்சத்துகளையும், காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது. அதனால், கண்ணீர் நமது கண்ணுக்கு அவசியமானது. லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி, கண்ணின் பக்கவாட்டு முனைக்கு மேல் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இது தோராயமாக 2 செ.மீ. நீளம் கொண்டது.
லாக்ரிமல் சுரப்பியில் அதிகப்படியான திரவம் சுரக்குமானால், அவை கண் குழாய்கள் வழியாக மூக்கின் நாசி குழிக்குள் சென்று விடுகிறது. கண்ணில் தூசி விழுந்தால், கண்ணில் உள்ள விழி, லென்ஸ் போன்ற பகுதிகளில் கீறல் உண்டாகி, பார்வைத்திறனில் பாதிப்பு ஏற்படுத்தும். சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களில் விழும் தூசியை சுத்தம் செய்து கண்களைப் பாதுகாக்கிறது.
பாக்டீரியாவை எதிர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் கண்களை பராமரிப்பதில் கண்ணீருக்கு அளவில்லாத பங்கு உண்டு. லாக்ரிமல் சுரப்பிகள் குறைவான கண்ணீர் திரவத்தை உற்பத்தி செய்தால் வறட்சி, அரிப்பு மற்றும் கண்களில் எரிதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.
- கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
- கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை.
கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மூளை போன்று கண்ணுக்கும் அதிகப்படியான வேலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய தலைமுறைகள். இதனால் உடல்ரீதியிலான குறைபாடுகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.
ஆரோக்கியத்தோடு அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்றால் அது அழகு சார்ந்த பிரச்சினை தான். குறிப்பாக கண்கள் பொலிவிழந்து காணப்படும். முகத்தில் அழகாய் இருக்க கூடியவை கண்கள். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையங்கள், கருமை நிறம், கண் இரைப்பைக்கு கீழ் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வரகூடும்.
ஒருவகையில் இது ஆரோக்கியம் குறைபாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். உடலில் வைட்டமின் சத்துகள் குறையும் போதும், நச்சுகள் வெளியேறாத போதும் இந்த பிரச்சனைகள் வந்தாலும் கூட மறுபுறம் சருமத்தை கண்களை உரிய பாதுகாப்பில்லாமல் வைக்கும் போதும் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துவிடும்
சுட்டெரிக்கும் வெயில் வாட்டவும் தொடங்கியுள்ளது. வெப்பம் மிகுந்த நமது நாட்டில் இயல்பாகவே உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது இயல்பாக உண்டாகும் ஆரோக்கிய குறைபாட்டில் அழகு சார்ந்த பிரச்சினையும் உண்டாகக் கூடும். அதில் முக்கியமானது கண்கள்.
கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை. ஓய்வும் தேவை. ஆனால் இரண்டும் கொடுக்காமல் அதிக வேலை கொடுக்கும் இந்த வெயில் காலத்தில் உரிய முறையில் கண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண் பார்வை பிரச்சனை, கருவளையம் பிரச்சனை போன்றவற்றை தவிர்க்கலாம் என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.
இந்த கண்களை எப்போதும் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது பாதாம். ஆரோக்கியமான உணவின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பது போலவே இது அழகு சார்ந்த குறிப்பிலும் சருமத்துக்கு சத்து கொடுக்கும் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பாதாம் பருப்பை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்கள் சத்துக்களையும் பொலிவையும் இழக்காமல் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்
பாதமை பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒரு முறை 30 எண்ணிக்கை பாதாமை மிக்சியில் பொடித்து வைத்துகொள்ளுங்கள். தினமும் தூங்குவதற்கு முன்பு அரை டீஸ்பூன் பாதாம் பருப்புடன் மூன்று டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு கண்களின் கீழ் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மீதி இருப்பதை முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள். சற்று காய்ந்ததும் முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.
தினமும் இரவில் இதை பயன்படுத்தி வரும் போது கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அவை படிப்படியாக குணமடையக்கூடும். கண்களில் கருவளையத்தால் உண்டான கருமையும் சிறிது சிறிதாக மறைய கூடும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம், கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்தில் படிந்திருக்கும் கரு மையான நிறம் அனைத்துமே நீங்கும். குறிப்பாக கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும். இதனால் கண்கள் மேக்- அப் போடாமலேயே அழகாக இருக்கும். லேசான ஒப்பனையிலும் கண்கள் பளிச்சென்று இருக்கும். சோர்வு இல்லாத கண்களை எப்போதும் பெறுவீர்கள்.
முக பராமரிப்பு என்னும் போது கண்களுக்கு பராமரிப்பு கொடுப்பதும் முக்கியம். பாதாம் அதிக விலை என்பவர்கள் முகத்துக்கு இல்லையென்றாலும் கண்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக பாதாமை பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை பொடித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். நிச்சயம் கண் ஆரோக்கிய மாகவே அழகு கூடும்.
பராமரிப்பு கடந்து அன்றாட வாழ்க்கையிலும் சில மாற்றங்களை கடைபிடியுங்கள். கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்வது அவசியம். பழச்சாறுகள், கீரைகள், காய்கறிகள் இவை எல்லாவற்றையும் தாண்டி தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்புவரை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டீவி முன்பு அதிக நேரம் செலவழிக்ககூடாது. செல்போன் அதிக நேரம் பார்க்க கூடாது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ப சிறுநீரையும் வெளியேற்ற வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் கண்ணை கண் போல் ஆயுள் வரையும் பாதுகாக்கலாம். கண்கள் காந்த கண்களாக எப்போதும் அழகாய் மிளிர தேவதையாய் வலம் வரவும் செய்யலாம்.
- ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.
- நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது.
அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் கூந்தல் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது. தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும். ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக செய்ய வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் செய்ய வேண்டும்.
கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை துடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் செய்யவேண்டும். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும். கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல கிடைப்பதை காணலாம்.
கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.
- ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
- மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.
நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.
புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.
கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.
கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.
ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.
- பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள்.
- ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது
டிஜிட்டல் யுகம், குழந்தைகளுக்கு பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார்.
இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.
- குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.
- குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின்-டி கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதான் விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், பகல் முழுவதும் வீட்டுக்கே வரமாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.
இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன் மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
- குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. உருவாக்குகிறது.
மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது.
காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம்.
உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும்.
அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.
- கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனை அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...
எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது. அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் உலர் வடைதல், கண் சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். கண்களின் நலன் பேணுவதற்கும், கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...
* நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும். பாதாமை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.
* கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும். கேரட்டை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். சாலட்டுகள், சூப்களாக தயாரித்தும் பருகலாம். உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை. மாகுலர் சிதைவை தடுக்கக்கூடியவை. பெர்ரி பழங்கள், குடை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகொடா, கீரை, ப்ரோக்கோலி, பட்டாணி போன்வைகளில் இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.
* ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்கள் போன்றவை கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களுள் முக்கியமானவை. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை ப்ரீ ரேடிக்கல் களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், செல்கள் சேதம் அடையாமல் தடுப்பதற்கும், புதிய திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
* கண் பார்வையை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய சில சத்தான முழு தானியங்கள்: ஓட்ஸ், பார்லி. மேலும் டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன் வகைகளில் லீன் புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கண் களுக்கு நலம் சேர்ப்பவை.
* முட்டையும் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை. கண்ணில் இருக்கும் கார்னியா வைட்டமின் ஏ மூலம் பாதுகாக்கப்படுகிறது. கண்ணின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் கார்னியா, கண்புரை, மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய் அபாயத்தை குறைக்கின்றன. காலை, மதியம் மற்றும் இரவு உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.
- குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
- குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.
அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.
இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.
அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- பெண்களின் அழகை கெடுக்கும் முக்கிய பிரச்சனை கண்களை சுற்றி கருவளையம் வருவது.
- கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.
பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவிடும். எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும். அந்தவகையில் தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும்.
விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும்.
இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.
- கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
- கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகளை பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்
கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.
யாருக்கு பாதிப்பு ஏற்படும்
தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.
கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்
கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.
20-20-20 விதி
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம். கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
Dr. B.மேஷாக் பீட்டர், MBBS, D.O.,கண் மருத்துவ நிபுணர் ராஃபா கிளினிக்தென்காசி.