search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
    X

    கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

    • குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.
    • குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின்-டி கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதான் விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், பகல் முழுவதும் வீட்டுக்கே வரமாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

    குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.

    இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன் மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×