என் மலர்
நீங்கள் தேடியது "கும்ப்ளே"
- நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.
- எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
அஸ்வின் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
அஸ்வின் இந்தியாவிற்கு சாம்பியன் பந்துவீச்சாளராகவும், சாம்பியன் ஆல்-ரவுண்டராகவும் இருந்திருக்கிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மேட்ச் வின்னராக பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்து உள்ளார். அந்த மாதிரியான எதிர்பார்ப்பை தினம் தினம் சுமந்து கொண்டு இருப்பது அவ்வளவு எளிதல்ல. அதை அவர் வாழ்க்கை முழுவதும் சரியாகச் செய்து இருக்கிறார். நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.
எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன். அதை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உங்களின் 2-வது அத்தியாயத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது முதல் அத்தியாயத்தைப் போலவே புகழ்பெற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
- விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.
சென்னை:
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.
விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.
எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.
முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:
நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.
இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
- இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.
ராஞ்சி:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.
- இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.
- இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அஷ்வின் 4 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகளும் கபில் தேவ் -219 விக்கெட்டுகளும் ஜடேஜா - 211* விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை அஷ்வின் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.
ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.
அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.
உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 75 டெஸ்ட் விக்கெட்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
- கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னையை சேர்ந்த 36 வயதான அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். நேற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.
உலகின் முதல் வரிசை பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டெஸ்டில் 12 விக்கெட் (முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 7) கைப்பற்றினார்.
அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.
முரளிதரன் (இலங்கை) 22 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ஹேட்லி (நியூசிலாந்து), ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.
அஸ்வின் ஒரு இன்னிங்சில் 34-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் ஹெராத்துடன் அவர் இணைந்தார்.
முரளிதரன் 67 முறையும், வார்னே 37 தடவையும், ஹேட்லி 36 முறையும், கும்பளே 35 தடவையும் ஒருஇன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.
மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் இருக்கிறார்.
அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.
அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 131 ரன் கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.
- பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள்.
- அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இதே போல வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானை தான் சொல்வேன்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன். 20 ஓவர் போட்டிகளில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். அவரது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம் இல்லாமல் வீசுவது என்பது கனவு தான். ஆனால் அதிலும் அர்ஷ்தீப்சிங் தேறி விட்டார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அவர் இது மாதிரியே முன்னேறி செல்ல வேண்டும். அதாவது ஜாகீர்கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வரவேண்டும்.
இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.