என் மலர்
நீங்கள் தேடியது "கையெழுத்து"
- கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி எல்லைகள் தாண்டி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கி வருபவர் ஆவார்.
- லியோனல் மெஸ்ஸி தனது 13 ஆவது வயதில் பார்சிலோனா கால்பந்து அணியில் சேர்வதற்காக நாப்கினில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அவரது ரசிகர்களுக்கு தெரிந்ததே.
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி எல்லைகள் தாண்டி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கி வருபவர் ஆவார். கால்பந்தின் மீது அதீத காதல் கொண்டது அர்ஜென்டினா நாடு. அந்த நாட்டின் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் ஈடு இணையற்ற பல்வேறு சாதனைகளை மெஸ்ஸி நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
கால்பந்தாட்டத்தின் கடவுள் டியாகோ மரடோனாவுக்குப் பிறகு அர்ஜென்டினா அணியில் குறிப்பிடத்தக்க இடத்தில் வைத்துப் பார்க்கப்படுபவர் இவர். சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டு அதற்காக தன்னை மெருகேற்றிக் கொண்டவர் மெஸ்ஸி. இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி தனது 13 ஆவது வயதில் பார்சிலோனா கால்பந்து அணியில் சேர்வதற்காக நாப்கினில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அவரது ரசிகர்களுக்கு தெரிந்ததே. அந்த நாப்கின் தற்போது சுமார் 762,400 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சத்துக்கு) ஏலத்தில் விறக்கப்பட்டுள்ளது அனைவரையும் மலைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு சமயத்தில் 13 வயதான மெஸ்ஸியை பார்சிலோனா அணியில் சேர்க்க ஆர்வம் காட்டிய அணியின் இயக்குனர் அவசரத்துக்கு கைவசம் காகிதம் இல்லாததால் நாப்கினில் ஒப்பந்த நிபந்தனைகளை எழுதி மெஸ்ஸியை கையெழுதிடச் செய்து அதை இதுநாள்வரை பத்திரப்படுத்தி வந்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் மெஸ்ஸி தனது திறமையின் மூலம் உலக சாம்பியனாக வளர்ந்துள்ளார்.
- ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
- கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது
இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் தோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகிறார்கள்.
A gift for the 1⃣0⃣3⃣ year old superfan ?
— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2024
Full story ? - https://t.co/oSPBWCHvgB #WhistlePodu #Yellove pic.twitter.com/hGDim4bgU3
- இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.
தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
- சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- 17-ந் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம்.
சென்னை:
நீட் விலக்கை வலியுறுத்தி பெறப்படும் கையொப்பங்கள் இதுவரை 50 லட்சத்தைத் தாண்டி உள்ளதாக அமைச்சரும் தி.மு.க. இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
நீட் விலக்கை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவா் அணி சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிகரித்து இப்போது 55 லட்சம் ஆகியுள்ளது. இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடா்ந்து, கையொப்ப மிட்டு மக்கள் தங்களது நீட் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகிறாா்கள். நீட் எதிா்ப்புணா்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும். டிச. 17-ந் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம்.
ஜனாதிபதியின் ஒற்றைக் கையொப்பத்தைப் பெறுவதற்காக நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்களும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவா்கள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இணையம் மூலம் கையொப்பத்தை பதிவுசெய்தார்
- மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் மாவட்ட அளவில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கழக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா ஊட்டி முகாம் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் இணையம் மூலம் கையெழுத்தை பதிவுசெய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணைசெயலாளர் பொன்தோஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, தொரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நீட் விலக்கை வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்ஒருபகுதியாக தூதூர்மட்டம் கிராமத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.பத்மநாபன் தலைமையில், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அப்போது பொதுமக்கள் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன், முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் ஹரி, ராமகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அப்துல்அசிக், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையதுமன்சூர்,நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம்ராஜா, குன்னூர் நகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
- கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்கான அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். திராவிட தமிழர் கட்சி செயலாளர் வெண்மணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக
நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில்ரவி, காந்தல்ரவி, செந்தில்நாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, முரளிதரன், பத்மநாபன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், அசார்கான், சந்திரகுமார், மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, மேத்யூஸ், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பவீஷ் நன்றி கூறினார்.
- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
- இன்று காலை சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து .செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் கையெழுத்து போட்டனர்.
- அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
- சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம்.
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
நம்முடைய அரசு அமைந்த பிறகு, கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி நம்மு டைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்தோம். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்தப் போராட்டத்திலேயே நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை நாம் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தேன். அதற்கான முன்னெடுப்பாக தான் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்க உள்ளோம்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும்.
மக்களின் கையெழுத்துகளை பெறுவதற்காக 'போஸ்ட் கார்டு' மற்றும் இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
ஏனெனில் அதில் ஒவ்வொருவரும் கையெழுத்து இடஇட நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என்ற கவுண்ட் டிஜிட்டலாக அந்த வெப்சைட்டில் தெரியும்.
அதனால் உறுப்பினர் சேர்க்கைக்கு படிவங்களை எடுத்து செல்வதுபோல் ஐபாட், டேப்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வீடு வீடாக ஏறி நாம் கையெழுத்து பெற வேண்டும்.
கவுன்ட் காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாதவர்களின் பெயர்களை போலியாக எழுதி, ஏதோ 10 நம்பர்களை போன் நம்பர் என டைப் செய்வது போன்ற தவறான விஷயங்களை தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம். பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கல்லூரி முன்பு நின்று மாணவர்களின் கையெழுத்துகளை பெறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியை பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வகையில் சிறப்பாக செய்திட வேண்டும்.
சென்னையில் கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (21-ந்தேதி) கையெழுத்து இயக்கத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்த உள்ளனர்.
- மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
- டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் கவிஞர் பாட்டாளி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழ்நாடு தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வசேவையா, மாநகர செயலாளர் பிரபாகர், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன், தமிழர் அறம் இயக்கத்தின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி யோகராஜ், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் நாத்திகன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.