என் மலர்
நீங்கள் தேடியது "டவர்"
- தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.
சேலம்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம் பகுதி, ஸ்வர்ணபுரி, ஜங்சன் மெயின் ரோடு, பேர்லேண்ட்ஸ் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் குடும்பம், குடும்ப மாக பொதுமக்கள் புத்தாடை வாங்க துணிக்கடை களுக்கு திரண்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிக ளிலும் கூட்டம் அலை மோதியது. மேலும் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், 5 ரோடு, முதல் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலமும், போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வைத்தார். செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார் .கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பொத்தனூர் பேரூராட்சியில் 2015 -2016 -ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ. 6.41 கோடியில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பேரூராட்சி பங்கு தொகை ரூ. 1 கோடியில் பயன்படுத்தாத தொகை ரூ.35 லட்சத்தை தற்போது பொத்தனூர் பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள புதுத் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்ட அறிவுரைகளைத் தொடர்ந்து சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுபடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ,சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொதுநிதியில் மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி பெறுதல், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நிதிமுறைகளின்படி பேரூராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்காக கள ஆய்வு செய்து செயல் அலுவலரின் குறிப்பாணை பரிந்துரையுடன் அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.
- ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
- இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை:
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).
இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.
அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.
ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.