என் மலர்
நீங்கள் தேடியது "துணைத்தலைவர்"
- நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
- பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது மிகவும் பேசப்பட்டது.
நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலை வராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார்
- தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.
வால்பாறை,
வால்பாறை நகராட்சி துணை தலைராக செந்தில் குமார் பதவி வகித்து வருகிறார்.
11வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் அங்கு குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து அவர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் செந்தில்குமார் இன்று 11வது வார்டு பகுதிக்கு வந்தார். அங்கு தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.
வால்பாறை நகராட்சி துணைத்தலைவரே நேரடியாக களமிறங்கி குப்பைகளை அகற்றியது பொதுமக்களிடம் பாராட்டுதலை பெற்று உள்ளது
- அமைச்சர் புதிய கால்நடை மருந்தகங்களை திறந்து வைத்தார்.
- துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் ரூ. 121.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுராமன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் கூறியதாவது:-
நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும். அதற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் விதமாக வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, ஆனைக்குட்டம், சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், திருவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் தலா ரூ. 40.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 121.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.
திருப்பூர் :
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.
- அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.
- மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- நான் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு துணைத் தலைவராக இருப்பவர் ஊராட்சியில் செய்யப்படும் அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் பராமரிப்பு, மின் கட்டணம் செலுத்துதல் போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி அலுவலர் ஆகியோரிடம் நேரிலும் மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- கடலாடி யூனியன் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெய ஆனந்தன், துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் யூனியன் தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கிய வுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் யூனியன் தலைவரிடம் தமிழக அரசு மீது அவதூறாகபொய் பிரசாரம் செய்யும் துணை தலைவர் ஆத்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
மனுவை பரிசீலிப்பதாக ஆணையாளர் கூறியதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்ந்தனர். பின்பு நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் மாய கிருஷ்ணன்: ஓரிவயல், மாரந்தை, வேப்பங்குளம், பகுதிகளில் உள்ள ஊரணி களில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் குமரையா: கீழச்செல்வனூர் கிராமத்தில் இருந்து நொண்டி கருப்பணசாமி கோவில் செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி பகுதியில் கோடை காலம் நெருங்குவதால் காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகலட்சுமி மலைராஜ்: ஏர்வாடி தர்கா பகுதியில் இருந்து சடைய முனியன் வலசை கிராமம் வரை தார்சாலை அமைக்க வேண்டும். சின்ன ஏர்வாடி, ஆதஞ்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: மீனங்குடி, கருங்குளம், கடுகு சந்தை ஊராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராஜேந்திரன்: சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும்.
கவுன்சிலர் நரிப்பையூர் முருகன்: நரிப்பையூர் ஊராட்சி மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாரதமாதா பள்ளி செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் சேது பாண்டியன்: பீ.கீரந்தை தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும். கொத்தங்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும். சேரந்தை கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை அமைக்க வேண்டும்.
துணை சேர்மன் ஆத்தி: கன்னிராஜபுரம் ஊராட்சி ரோச்மாநகர் கிராமத்தில் அங்கன்வாடி அமைக்கப்பட்டு 7 வருடம் ஆகியும் அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வில்லை. இதுகுறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் கவுன்சிலர்கள் பார்வதி ஜெயபாலன், குஞ்சரம் முருகன், பானுமதி ராம மூர்த்தி, செய்யது ராவியா, ஞானம்மாள், மகேசுவரி சக்திவேல் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை மனுக்களாக அளித்தனர்.
கவுன்சிலர்கள் கொடுத்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.
- நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
- 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பூர் :
சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.
ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.
- திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
- பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பேரூராட்சிமன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் தரம் பிரித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.