search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்படாஸ் மைதானம்"

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.
    • டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது. 13 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி விளையாடி பார்படாஸ் மைதானத்தில் பிட்சில் உள்ள மண்ணை இந்திய அணியின் கேப்டன் சாப்பிட்டார். பின்னர் பிட்சை தொட்டு வணங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×