என் மலர்
நீங்கள் தேடியது "புழு"
- அமுல், உங்களின் அதிக புரதச்சத்து நிறைந்த மோர் உடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பியுள்ளீர்கள்.
- நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் சொல்லவில்லை.
அமுல் நிறுவன மோர் கப்பில் புழு நெளிந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கஜேந்தர் யாதவ் ஒருவர் பதிவிட்டு அமுல் நிறுவனத்தை விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், "அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். அமுல், உங்களின் அதிக புரதச்சத்து நிறைந்த மோர் உடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பியுள்ளீர்கள். அண்மையில் நான் வாங்கிய மோரில் புழுக்கள் இருப்பதைக் கண்டு எனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தவே இதை எழுதுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் அடுத்த எக்ஸ் பதிவில், "நான் அமுல் நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், அத்துடன் இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இணைத்து, அவர்களின் சோதனைக்காக இன்றுக்குள் சேகரிக்கும்படி கேட்டுக் கொண்டேன். நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் சொல்லவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள அமுல் தலைமை அலுவலகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாகவும், நடந்த இந்த சம்பவத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள் என்று கஜேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் பிரியாணி கடை உள்ளது.
- ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் கடையில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் பிரியாணி கடை உள்ளது. இந்த கடையில் கோவையை சேர்ந்த 2 பேர் முட்டை பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பிரியாணியில் புழு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் அங்கு சென்று ஆய்வு செய்தார். புழு கிடந்ததாக கூறப்படும் முட்டை பிரியாணி முழுவதையும் கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புழுவுடன் இருந்த மீதி பிரியாணியையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.
உடுமலை :
உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
- டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளிற்கு ஆயிரக்கணக்கில் பல்வேறு வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார். இதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அந்த டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அந்த கடையில் 1 மணி நேரத்திற்கு மேல் மதுவிற்பனை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மதுபாட்டில்களை வாங்க வந்த மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க முடியாமல் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.
இதுகுறித்து திருவண்ணாமலை டாஸ்மாக் உயர் அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
- ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.
இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.
தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.