search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரோ கால்பந்து"

    • வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
    • அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.

    பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.

    மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது. 



    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.

    எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.

    துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின. 

    • ஓன் கோல் மூலம் ஜார்ஜியாவுக்கு முதல் கோல் கிடைத்தது.
    • அதன்பின் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 4 கோல்கள் அடித்தனர்.

    ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.

    இன்று இரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் அடித்த பந்தை கோல் விழாமல் தடுக்க முயன்றார் ஸ்பெயின் வீரர் ராபின் லே நோர்மண்ட். ஆனால் பந்து அவர் மீது பட்டு கோலாக மாறியது. இதனால் ஜார்ஜியாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் அடித்தது.

    ஆனால் 39-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி இடது பக்கம் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார். 51-வது நிமிடத்தில் ஃபேபியன் ரூய்ஸ், 75-வது நிமிடத்தில் நிகோ வில்லியம்ஸ், 83-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கோல் அடிக்க ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. 

    • குரேஷியா மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    • ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியா மற்றும் இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. 3 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வி 1 டையுடன் உள்ளது. அல்பேனியா, குரேஷியா அணிகள் இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை.

    ×