என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டுமனைப்பட்டா"
- 30 ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கேட்டு மீனவர்கள் போராடி வருகின்றனர்.
- அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நகர் லாஞ்சியடி பகுதியானது விசைப்படகு மீனவர்கள் வசிக்கும் கடலோர கிராம மாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்ற னர்.
இங்கிருந்து ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய், மீன் போன்ற கடல் உணவுப் பொருட்களை கேரளா போன்ற வெளி மாநிலங்க ளுக்கு மற்றும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு மீன் துறை மூலமாக ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கும் டோக்கன் எனப்படும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. வாரத்தில் சனி, திங்கள், புதன் கிழமைகளில் கட லுக்கு சென்று மீன் பிடித்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளில் கரை திரும்புவர். அவ்வப் போது புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடலுக்கு செல்ல முடிவதில்லை.
மேலும் வருடத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடைக் காலத்தில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் 30 ஆண்டுகளாக சாலை, குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசதியில்லா மலும், வீட்டு மனை பட்டா கூட இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழ்வாதாரம் கேட்டு பல ஆண்டுகள் போராடி எந்த பயனும் இல்லாததால் தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க திட்ட மிட்டுள்ளனர். அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.
- திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
- யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை,
தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது.
- தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் தாலுகா ஜெகதேவி ஊராட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது. இதற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கி பேசியதாவது:-
தமிழக முதல் அமைச்சர் பதவியேற்ற ஒன்றரை ஆண்டில் பொதுக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பெண்களுக்கு இலவச பஸ் வசதி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் பட்ட படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் வீடுமனை பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநில முதல் அமைச்சர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தாசில்தார் பன்னீர் செல்வி, துணை தாசில்தார் பத்மா, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜெகதேவி கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டது.
- மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூ ட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.