என் மலர்
நீங்கள் தேடியது "மே 17 இயக்கம்"
- காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரெியல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இதற்காக அவர் இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார்.
இதற்கிடையே பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.
இதில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பசும்பொன் பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மோடிக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மோடி வருகையை கண்டித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கருப்பு கொடியுடன் பிரதமர் மோடியை கண்டித்தும், புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பழனிக்குமார் வட்டார தலைவர்கள் ஜெயராஜ், வேல்முருகன், செல்வராஜ், செந்தில், நகரத் தலைவர் சவுந்தர், எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் ராஜா தேசிங்கு மற்றும் நிர்வாகிகள் மனோகரன், பாலகிருஷ்ணன், முனியசாமி போஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த அமைப்பின் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #May17movement #ThirumuruganGandhi


மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதில் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து இன்று காலை திருமுருகன் காந்தியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக வார்டில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருமுருகன் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். #ThirumuruganGandhi
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது திருவெண்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமுருகன் காந்தி சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் 161-வது பிரிவின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கு கருத்துரிமைக்கு எதிரானது. எனவே அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜ.நா. மன்றத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் படுகொலைகள், எட்டு வழிச்சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், இப்பிரச்சனைகளில் ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.
பின்னர் பெங்களூர் விமான நிலையத்தில் ஆக.9-ந்தேதி திருமுருகன் காந்தியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனநாயக மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து மனித உரிமைப் போராளிகள் அனைவரும் போராட வேண்டும். மேலும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆங்காங்கே மனித உரிமைப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், அரங்க குணசேகரன், திருநாவுக்கரசு, பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #USBoatAccident