என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 People arrested"

    • திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் நிதிநிறுவன கணக்கு வழக்குகளை ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
    • கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(29). இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் கணக்கு வழக்குகளை நிதிநிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.

    திருமணம் முடிந்து மீண்டும் நிதிநிறுவனத்திற்கு வந்த செல்வபிரகாஷ் வசூல் பணம் குறித்து கேட்டார். அப்போது ஊழியர்கள் அந்த பணத்தை மற்றவர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் ஜெயபிரகாஷ் விசாரித்தார். அதில் பணம் யாருக்கும் கொடுக்காமல் ரூ.59 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமியார்புதூரை சேர்ந்த மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ஊழியர் ரகுராம்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருட முயன்றவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குமார் (வயது42). இவர் தள்ளுவண்டியில் கூழ் மற்றும் மோர் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கு கல்லாபெட்டியில் இருந்த பணத்தை சோனிராஜா (54), சிவக்குமார் (51) ஆகியோர் திருட முயன்றனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது

    கோவை,

    கோவை சூலூர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்.

    தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அண்ணா நகரில் சிலர் கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து இருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிரண்தாஸ் (வயது 21), அருள் கிருஷ்ணன் (21), ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. ெதாடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசியை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
    • 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசியை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இவ்வாறு கடத்தப்படும் ரேசன் அரிசி பட்டை தீட்டுவதற்காகவே ரைஸ் மில்களும் உதவி செய்து வருகின்றன. அந்த மில்களில் ரேசன் அரிசி குருனையாகவும், மாவாகவும் அரைக்கப்பட்டு மாற்றப்படுகிறது.

    மேலும் இவை இட்லி மாவு, தோசை மாவு தயாரிக்க விற்பனை செய்யப்படுகிறது. டன் கணக்கில் ரேசன் அரிசி சேர்த்து வைக்கப்பட்டு லாரிகள் மூலம் கேரளா வுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் பெரிய குளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப்பிற்கு அரிசி கடத்தல் தொடர்பாக ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசி லாரிகளில் ஏற்றபடுவதை கண்டறிந்து கையும் களவுமாக பிடித்தார்.

    மேலும் அவரது வீட்டிற்குள்ளும் அரிசி மூடைகள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள் ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் சத்தியநாராயணன் மற்றும் லட்சுமணன் ஆகி யோரை கைது செய்தனர்.

    லாரி பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் ெதாடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

    இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி பால முருகன் தெரிவிக்கையில், ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தால் புகார் அளிக்கலாம் என்றார்.

    • குடிபோதையில் வழிமறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது அண்ணன் பாலாஜியுடன் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனை செய்ய கொண்டு வந்தார். அப்போது அதே பகுதிைய சேர்ந்த 2 பேர் குடிபோதையில் அவர்களை மறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை பிடித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் கோணப்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ரமேஷ்(30), மருதாணிக்குளம் பகுதிைய சேர்ந்த விக்கிபாண்டி(35) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் அஞ்சுகுழிப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த மருதை மனைவி லட்சுமி(47). இவரிடம் அதேபகுதிைய சேர்ந்த முருகேசன் மகன் அழகுராஜா(27) குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.

    • டாப்ஸ்டசேன் அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை வெட்டி அதன் பட்டைகளை சீவி எடுத்துக்கொண்டு தப்பினர்
    • 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(61). வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் சின்னன்(55). இருவரும் நண்பர்கள். வனப்பகுதியில் வேட்ைடயாடுவதும், விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துவதும் சிறுவயதில் இருந்தே வாடிக்கையாக செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை குரங்கணி மலைப்பகுதியில் டாப்ஸ்டசேன் அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை வெட்டி அதன் பட்டைகளை சீவி எடுத்துக்கொண்டு தப்பினர்.

    அதே நேரத்தில் ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் பஸ்நிறுத்தம் அருகே ராஜா, சின்னனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கண்டறிந்து இருவரிடமும் விசாரித்தனர். இந்த சோதனையில் இருவரும் அவர்கள் பையில் வைத்திருந்த சீவப்பட்ட சந்தனமரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வழக்குபதிவு செய்து போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

    • சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பாக்கியபுரத்தை சேர்ந்த ஜீவா மகன் விஜய் (வயது22), கீழ் பூமி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகன் (47) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • எருமாடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார், பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வேலுசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 50), அப்துல் வக்பு(66) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனையிட்டதில், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த ஒரு பெண், வாலிபரை வழிமறித்தார்.
    • 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார்(33)கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சுந்தரபுரம் மதுக்கரை ரோடு பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.அப்போது பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த ஒரு பெண், சிவகுமாரை வழிமறித்து, தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் ஒரு ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த சிவகுமார் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் இருவரையும் பிடித்து விசாரித்தார்.

    விசாரணையில் அந்தப் பெண் சுந்தராபுரம் உழவர் சந்தை பின்புறம் அமைந்துள்ள அன்னை இந்திரா நகரில் வசிக்கும் உமாவதி(46) என்பதும், அவருடன் நின்றிருந்தவர் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த செல்வம் (51) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அன்னை இந்திரா நகரில் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி, அங்கிருந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். உமாவதியையும் செல்வத்தையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்
    • போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மறுகால்குறிச்சியை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பு (வயது 23), முருகன் (23) என்பதும், இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தினர்.
    • மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான நூல்கடை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில், 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும், ஆபாசமாக திட்டியும் செல்வதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பெரிய கத்தியுடன், மோட்டார் சைக்களில் சுற்றிவந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை விசாரித்த போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் திரு.பட்டினம் பண்டக சாலையைச்சேர்ந்த முகம்மது ஆசிக்(20), பின்னால் பெரிய கத்தியை வைத்திருந்த நபர் காரைக்கால் உமர் புலவர் வீதியைச்சேர்ந்த ஹமீது சுல்தான்(19) என்பதும் தெரிவந்தது. அவர்களின் மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தள்ளுவண்டியில் செருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள உப்பு மண்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 20). தங்க நகை தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தான் வேலை பார்க்கும் கடையில் பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது கடைக்குள் வைசியாள் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணிகண்டன் (19), சஞ்சய் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கடையில் இருந்த விஜயை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500 பணத்தை பறித்து தப்பி ஓடினர்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து விஜய் பெரியக்கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க நகை தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த கல்லூரி மாணவர் சிவ மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நவநீதன் (32). இவர் தள்ளுவண்டி செருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் ரோட்டில் செருப்பு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தள்ளுவண்டியில் இருந்து ரூ.450 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த நவநீதன் அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார்.

    பின்னர் அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அஜீஸ் (37) என்பது தெரிய வந்தது.

    போலீசார் இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×