என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 death"

    • இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தின் சல்லகேர் மற்றும் பல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மௌலா, சமீர் மற்றும் ரெஹ்மான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். அனைவரும் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை பல்டி அடித்தது. பல்டி அடிக்கும் போதே காரில் இருந்த ஒருவர் கிழே விழுந்த அதிர்ச்சி காட்சியும் அதில் தெரிகிறது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபீனா தான் இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.
    • நாங்கள் 3 பேரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருப்போம் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி தட்டான்குளம் பாண்டியநகரை சேர்ந்தவர் பர்கான்(42). ஓய்வு பெற்ற ராணுவஅதிகாரியான இவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா(37). இவர்களது மகள்கள் ஷனா(13), யமீனா(11). 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    சபீனா பழனியில் ஒரு பேக்கரி கடை நடத்தி வந்தார். நேற்று மாலை வரை இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சபீனா தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.

    இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபீனா தான் இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனவே என்னுடன் எனது குழந்தைகளையும் அழைத்துச்செல்கிறேன். நாங்கள் 3 பேரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருப்போம் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர் வீட்டிற்கு வந்தார். அவர் இறந்த தனது மனைவி மற்றும் மகள்களின் உடலை பார்த்து கதறி அழுதார். இறப்பதற்கு முன்பாக தனது மகள்கள் 2 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு சபீனா இறுதிச்சடங்கு செய்திருந்தார். இவர்கள் சாவுக்கு யார் காரணம் என்பது குறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    கணவன்-மனைவி இடையே ஏதேனும் பிரச்சினை உள்ளதா என கேட்டறிந்தனர். பேக்கரியில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சபீனாவின் செல்போனை பறிமுதல் செய்து அதில் வேறுயாரேனும் மிரட்டல் விடுத்தனரா என்பது குறித்தும் யாருடன் அதிகநேரம் பேசியிருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் சிக்கி பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் நேற்று மாலை திருப்பத்தூர் காக்கங்கரை இடையேயான தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பூரை சேர்ந்தவர் உதேஷ்குமார் (33). இவர் நேற்று இரவு ஜோலார்பேட்டை 1-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்ற ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நசீயா இவர் இன்று காலை ஆம்பூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலம்:

    திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவர்களது மகன் செல்லதுரை. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(82), சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.

    இந்த கார் மயிலம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    விபத்துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரான்சிஸ்ராஜம், மோசஸ் ஆகிய 2 பேரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.

    சிறுமி தாட்னி, சகாயமேரி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம், அரூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அகமது. இவரது மகன் சலீம்பாஷா (வயது25), இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஏகநாதன், குலாப், இஸ்மாயில் மற்றும் பச்சினாம்பட்டி பகுதியை சேர்ந்த சுல்தான் ஆகியோர்கள் நேற்று மொரப்பூருக்கு காரில் சென்றனர். அந்த காரை சுல்தான் ஓட்டினார். பின்னர் நேற்று நள்ளிரவு அனைவரும் காரில் வீடு திரும்பினர்.

    அப்போது மொரப்பூர்- அரூர் சாலை அக்ரஹாரம் புதிய நகர் என்ற இடத்தில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அடுத்தடுத்து 3 புளிய மரத்தின் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த சலீம்பாஷா, ஏகநாதன், குலாப் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த இஸ்மாயில், சுல்தான் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியக்காட்டுகாலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி.

    இவரும், இவரது மனைவி வேதவல்லி (26), மகன்கள் அரீஷ் (4), பாகுபலி (2), அதே பகுதியை சேர்ந்த நீலாம்பரி ஆகியோரும் ஒரே மொபட்டில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.

    மொபட்டில் இருந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வேதவல்லியும், பாகுபலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விஜய், அரீஷ், நீலாம்பரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அரீஷ் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    குமாரபாளையம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
    குமாரபாளையம்:

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு கேரள மாநிலம் அடூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 4.45 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே சொகுசு பஸ் வந்தபோது, முன்னால் மூங்கில் பாரம் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் லாரி கவிழ்ந்து மூங்கில் கம்புகள் எல்லாம் மளமளவென உருண்டோடியது. அதுபோல் சொகுசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிக்குநூறாக சிதறியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பத்தினம்திட்டா மாவட்டம் மங்கரம் பகுதியை சேர்ந்த மாத்யூ என்பவருடைய மனைவி மினிவர்க்கீஸ் (வயது 37) மற்றும் இவர்களது மகன் ஹாசல் லிஜோ(10), கிளீனர் சித்தார்த்(38) ஆகிய 3 பேரும் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.



    மேலும் கேரளாவை சேர்ந்த பயணிகள் அருண் (29), கேஷியல்(26), ஷானு(38), லிஜோ(25), ஷியாம் (30), பிலோமினா(54), பாபு புருசோத்தம், ஷோபல்(38), டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலிதாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தகவல் அறிந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம், குமாரபாளையம் தாசில்தார் ராகுநாதன், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் பலியான மினிவர்க்கீஸ், அவரது மகன் ஹாசல் லிஜோ, கிளீனர் சித்தார்த் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான மினிவர்க்கீஸின் கணவர் மாத்யூ மங்கரம் பகுதியில் கிறிஸ்தவ சபையின் பாதிரியராக உள்ளார். விபத்தில் அவருக்கும் கழுத்தின் பின்பக்கத்தில் அடிப்பட்டது. தனது மனைவி, மகன் இருவரும் தன்கண்முன்னே இறந்ததை கண்டு அவர் கதறி துடித்தார்.

    கேரளாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும் இந்த விபத்து குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பஸ் கேரள மாநிலத்தை சேர்ந்த பஸ் என்பது தெரியவந்துள்ளது.

    அதிகாலை என்பதால் தூக்க கலக்கத்தில் டிரைவர் சொகுசு பஸ்சை வேகமாக ஓட்டி வந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். #tamilnews
    ×