search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 கட்ட தேர்தல்"

    கும்பகோணத்தில் வாலிபர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில் கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்்கள் ராஜா, செல்வகுமார், போலீசார் பாலு, நாடிமுத்து ,சுரேஷ், ஜனார்த்தனன், பார்த்திபன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்த னர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், கார்த்திக், விஜயகுமார்,சிபிராஜ், சந்தோஷ்குமார், தருண் பாலாஜி ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

    கொலை செய்ய பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களும் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
    கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள்  கொலையாளிளை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
    • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
    • வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.

    அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திண்டுக்கல்லில் உழைக்கும் மகளிருக்கான 6-வது மாநில மாநாடு நடைபெற்றது
    • மகளிருக்கு ஓய்வூதியம் வழங்க மாநாட்டில் தீர்மானம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இந்தியகட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மாலதி தலைமை வகித்து பேசினார். பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கன்வீனர் லூர்துரூபி, சிங்காரவேலு, குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் மாலதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    உழைக்கும் மகளிருக்கு சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் வழங்கவேண்டும். மேலும் பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் மற்றும் மாதந்தோறும் ரூ.3ஆயிரம் வழங்கவேண்டும். மழைக்காலம் நிவாரணம் வழங்குவதோடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல மகப்பேறு காலத்தில் உழைக்கும் மகளிருக்கு விடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும்.

    பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழகத்தில் உள்ளூர் கட்டிட தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இதுகுறித்து அகிலஇந்திய தொழிலாளர் சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வலியுறத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

    இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம்.

    7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    பாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாகவும் டெல்லியில் மிக குறைவாகவும் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும், மே 5-ம் தேதி 51 தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில்  ஓட்டுரிமை பெற்ற 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    இன்று காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் 63.09 சதவீதம் வாக்குகளும் டெல்லியில் 36.73 சதவீதம் வாக்குகளும்  அரியானாவில் 51.48 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    உத்தரப்பிரதேசத்தில் 40.96 சதவீதம் வாக்குகளும்  பீகாரில் 43.86 சதவீதம் வாக்குகளும் ஜார்கண்டில் 54.09சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 48.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்தமாக 46.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
    மக்களின் ஆத்திரம் ஓட்டுகளாக மாறி விழுந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு  நடைபெற்றுவரும் ஆறாம்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது வாக்குரிமையை இன்று நிலைநாட்டினார்.



    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, ‘உண்மையான விவகாரங்களை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடி தேவையில்லாத கதைகளை கூறி வருவதால் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் கொண்டுள்ளனர். 

    இப்போது அவர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுகளாக பதிவு செய்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    நாடாளுமன்ற தேர்தலில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பீகாரில் 21.52%, அரியானாவில் 21.01%, மத்தியப்பிரதேசத்தில் 20.93%, உத்தரப்பிரதேசத்தில் 21.57%, மேற்கு வங்காளத்தில் 37.56%, ஜார்க்கண்டில் 30.23%, டெல்லியில் 15.95 சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    தலைநகர் டெல்லியில் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் காலையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் ரபேல் ஊழல் என இந்த தேர்தலில் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார். நாங்கள் அன்பை பயன்படுத்தினோம். இந்த மக்களவை தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.



    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவிலும், டெல்லியில் கவுதம் காம்பீரும் வாக்களித்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

    இதேபோல், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கவுதம் காம்பீர், ராஜீந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
     
    மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில்  மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய மந்திரிகள் 6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

    உ.பி.யின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.



    இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இதேபோல், புதுச்சேரியில் வெங்கட்டா நகரில் உள்ள வாக்குச்சாவடி 10-ல் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகள் அழிக்கப்படவில்லை என்பதால் இங்கு மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

    7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×