என் மலர்
நீங்கள் தேடியது "6 கட்ட தேர்தல்"
- லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
- வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.
அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திண்டுக்கல்லில் உழைக்கும் மகளிருக்கான 6-வது மாநில மாநாடு நடைபெற்றது
- மகளிருக்கு ஓய்வூதியம் வழங்க மாநாட்டில் தீர்மானம்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இந்தியகட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மாலதி தலைமை வகித்து பேசினார். பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.
முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கன்வீனர் லூர்துரூபி, சிங்காரவேலு, குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் மாலதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
உழைக்கும் மகளிருக்கு சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் வழங்கவேண்டும். மேலும் பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் மற்றும் மாதந்தோறும் ரூ.3ஆயிரம் வழங்கவேண்டும். மழைக்காலம் நிவாரணம் வழங்குவதோடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல மகப்பேறு காலத்தில் உழைக்கும் மகளிருக்கு விடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும்.
பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழகத்தில் உள்ளூர் கட்டிட தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இதுகுறித்து அகிலஇந்திய தொழிலாளர் சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வலியுறத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.