search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Surfing Competition"

    • சர்வதேச அலைசறுக்கு போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.
    • இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் (அலைசறுக்கு) சங்கம் சார்பில் இந்திய சர்பிங் சம்மேளனம் அனுமதியுடன் சர்வதேச அலைசறுக்கு ஓபன் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள கடலில் ஆகஸ்டு 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இது உலக சர்பிங் லீக் போட்டி தொடருக்கு உட்பட்டதாகும்.

    சர்வதேச அலைசறுக்கு போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்பட 10 வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்தியா சார்பில் 10 பேர் களம் காணுகிறார்கள். போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.37 லட்சமாகும். இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ×