search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro drinking water"

    • சிறுவன் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரியவரும்.
    • கேன் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதில் சில மாறுதல்கள் தெரிய வந்துள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையில், தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரத்தில், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " சிறுவன் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரியவரும்.

    பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

    இதேபோல், மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை. சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பில் கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கேன் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதில் சில மாறுதல்கள் தெரிய வந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட கேன் குடிநீர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் கேன் குடிநீர் விநியோகம் செய்பவர்கள் தரத்தை ஆய்வு செய்யப்படும்.

    குடிநீரில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் ஏதேனும் கலந்து உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஆய்வுக்குப் பிறகு சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்றார்.

    ×