search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvAFG"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • தொடக்க வீரர் குர்பாஸ் 80 ரன்கள் விளாசினார்.
    • பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள் பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹமதுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் ஜத்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுகு்கு 14.3 ஓவரில் 103  ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது.

    அதன்பின் வந்த ஓமர்ஜாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஃபின் ஆலன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது.

    கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரனனிலும் ஆட்டமிழந்தனர்.

    பரூக்கி, ரஷித் கான் தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்க்க 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து. இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

    • அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது
    • இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.

    அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா

    அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்

    அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா

    கேப்டன் வில்லியம்சன், விக்கெட் கீப்பர் தேவன் கான்வாய் ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்தில் 28 ரன்களும், டேரில் மிட்செல் 17 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் (40 ரன்- நாட் அவுட்) கீப்பர் தேவன் கான்வாய் (36 ரன் -நாட் அவுட்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர். 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
    ×