search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spiritual event"

    • இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள் என்று கூறியுள்ளார்.

    • ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வி நிறைவு விழா இன்று நடை பெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதம் இரண்டு முக்கிய போதனைகளை அளித்து உள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ,மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா அமைதியை விரும்புகிறது. நமது நாட்டைச் சுற்றிலும் சீனா துறைமுகங்கள் அமைத்து தளவாடங்களை இறக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    அன்றில் இருந்து 7 வருடங்களாக ஜூன் 21ந் தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது உலக மாற்றம் ஏற்படவென்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும். மனிதன் மாறும் போது வீடு மாறும் ,கிராமம் மாறும், சமுதாயம் மாறும், நாடும் மாறும். நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார். உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×