search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide threats"

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (வயது 47). பழைய இரும்பு கடைவைத்துள்ளார். தனது மனைவி மற்றும் 14 வயது, 9 வயது என இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இளங்காமணி, தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் வைத்து பூட்டியதுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு பற்ற வைத்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இளங்காமணியை கதவை திறக்க செய்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே மீட்டு வரும்போது, சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி, காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்துள்ளார்.

    இதில் லேசான காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்காமணி கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து இவ்வாறு செய்துள்ளார். ஒரு வழியாக அவர்கள் செல்போன் மூலமாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்த்தனர்.

    • தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.
    • போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    குனியமுத்தூர்:

    மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன்.

    அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தோம்.

    அப்போது அந்த பெண், தனது கணவர் இறந்துவிட்டார் எனவும், 2 குழந்தைகளை வைத்து கொண்டு தான் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தனக்கு நீங்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நானும் அதனை நம்பி அவருக்கு 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.90 ஆயிரம் பணம், துணிமணிகள், காலணிகள், செல்போன், கார் வாங்கி கொடுத்துள்ளேன். இதன் மதிப்பு மொத்தம் ரூ.20 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் இறக்கவில்லை என்பதும், அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்வதும் எனக்கு தெரியவந்தது. மேலும் பெண்ணுக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் இருப்பதை நான் அறிந்தேன்.

    இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே கணவர் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நான் அவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

    அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் தற்போது புகார் அளித்துள்ளேன். எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
    • தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.

    இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க வலியுறுத்தி மரத்தில் ஏறி 2 பெண் கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது.

    கேரள அரசு சார்பில் இயக்கப்படும் பஸ்களில் ஏராளமான டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். கேரள அரசு பஸ்களில் பெண்களும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    சமீபத்தில் போக்குவரத்து கழகத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. இதனால் பலர் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட கண்டக்டர்களும், டிரைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    தங்களுக்கு மீண்டும் டிரைவர், கண்டக்டர் பணி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று அவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு கண்டக்டர்களும், டிரைவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 2 பெண் கண்டக்டர்கள் உள்பட 4 பேர் அந்த பகுதியில் நின்ற பெரிய ஆலமரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களுக்கு மீண்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்குவதாக உறுதி அளிக்காவிட்டால் மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்குச் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. மரத்தில் இருந்து இறங்கவும் மறுத்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மரத்தில் ஏறி போராடி அவர்களை மீட்டனர்.

    போராட்டம் நடத்திய 2 பெண் கண்டக்டர்கள் உள்பட 4 பேரையும் கயிறு கட்டி மரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×