search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTF Vasan"

    • டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.

    டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.

    • டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    • விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பல நாட்கள் சிறையில் இருந்தார். பலமுறை ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியான நிலையில் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது, மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதனிடையே, இது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

    மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.

    • வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன்.
    • இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    இப்பட பூஜை விழாவில் இருந்தே இப்படத்தின் சர்ச்சையும், கேளி மற்றும் கிண்டல்கள், ட்ரோல் செய்த வண்ணம்தான் உள்ளது. சில நாடகளுக்கு முன் கூட மதுரையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ஃபோன் பேசிய படி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும் வழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.

    இப்படத்தில் இரண்டாம் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய போஸ்டரில் டிடிஎப் வாசன் மிகவும் கோபமாகவும் அவருக்கு பின்னாடி ஒரு கார் ரோட்டில் இருக்கிறது.

    தலைப்பில் Indian Penal Law{IPL} என குறிப்பிட்டுள்ளது. இப்படம் கார் ரேசிங் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.
    • டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.

    இதையடுத்து, செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய வழக்கில் டி.டி.எப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். நிபந்தனை ஜாமினில் வந்த டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    • 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.
    • 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். கையெழுத்திட வந்த வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார்.
    • அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.

    அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கேட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என டி.டி.எப்.வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தினர்.

    • செல்போன் பேசி கொண்டே டி.டி.எப். வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
    • வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும்.

    செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன் பேசி கொண்டே டிடிஎப் வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலாக நிலையில் காவல்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இவர் மீது ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு டிடிஎப் வாசன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது, "வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்" என்று டிடிஎப் வாசன் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையில் டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை எனவும் சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

    கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள டிடிஎப் வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பு வாதம் முன்வைத்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட வேண்டும் எனவும் அதனை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

    • டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
    • அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்து வருகிறார்.

    மதுரை:

    பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதன்பின், டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

    இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

    அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசன், நேற்று ஜாமினில் விடுதலை ஆனார்
    • கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன்

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    ஜாமின் கிடைத்த நிலையில், டிடிஎஃப் வாசன் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், சர்வதேச லைசென்ஸ் பெற்று மீண்டும் பைக் ஓட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையெனில் மேல்முறையீடு செய்யலாம். கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றபோது சற்று வருத்தமாக இருந்தது.

    இவ்வாறு டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

    ஆனால், சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் வாகனம் ஓட்ட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
    • வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    யூடியூபர் டி.டி.எப். வாசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    இதையடுத்து யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் டி.டி.எப். வாசன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • டிடிஎப் வாசனின் யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்தார் இருந்தார்.
    • அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.

    யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் 2033 அக்டோபர் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

    ×