search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த TTF வாசன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த TTF வாசன்

    • மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.
    • டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.

    இதையடுத்து, செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய வழக்கில் டி.டி.எப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். நிபந்தனை ஜாமினில் வந்த டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    Next Story
    ×