என் மலர்
நீங்கள் தேடியது "tea party"
- கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.
தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.
நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.
நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.
வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.
- கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.
அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.
புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.
புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.
எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.
முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?
அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
- பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் பங்கேற்றுள்ளனர்.
தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றார்.
நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை திமுகவின் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற தேநீர் விருந்தை முதலமைசச்சர் புறக்கணித்த நிலையில், இந்தாண்டு திமுக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏழை, நடுத்தர மக்களுக்காக முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- தமிழக மலை பிரதேசங்களில் வல்லுநர் குழுவை கொண்டு அறிவியல் ஆய்வு நடத்தப்படும்.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மருந்தாளுநர்கள் பயன்படும் வகையில் தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்படும்.
* Genric Medicine என்ற வகையில் குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்படும்.
* ஏழை, நடுத்தர மக்களுக்காக முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
* நாட்டுக்காக உழைத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் கொண்டுவரப்படும்.
* வரும் பொங்கல் முதல் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.
* தமிழக மலை பிரதேசங்களில் வல்லுநர் குழுவை கொண்டு அறிவியல் ஆய்வு நடத்தப்படும்.
* வல்லுநர் குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
* ஆளுநர் அளிக்கும் விருந்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்போம் என்று கூறினார்.
- தமிழக கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
- தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
சென்னை:
நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் தலைவர்கள் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.
அதில் அவர்கள், "கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
- சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
- ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.
அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுகவும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது.
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.…
— Selvaperunthagai K (@SPK_TNCC) August 13, 2024
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
- மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு சத்திரக்குடியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதை பார்வையிட முடிவு செய்தார். 10 கிராமங்கள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
இதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இதே போல் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும் என்றும், மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உதவுவதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை. முக்கியமாக சி.டி.ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது. இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டார். மற்றும் இணை இயக்குனர் பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்கும்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு உத்தர விட்டார்.
- குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.
- பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வார்கள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை (26-ம் தேதி) தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடந்த 23.1.2023 அன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளின்போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுத வேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் கவர்னரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.