என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
- பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வார்கள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை (26-ம் தேதி) தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடந்த 23.1.2023 அன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளின்போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுத வேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் கவர்னரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.