search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaidyanathan MLA"

    • இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.
    • தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் கவர்னர் தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை துச்சமென நினைத்து இழிவாக பேசியுள்ளார்.

    தேர்தல் தோல்வி இவரை இப்படி பேச சொல்கிறதோ என்று எண்ணத்தோன்று கிறது.

    இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பி.க்கள்தான் இந்த பாரதத்தின் வலிமையான எதிர்க்கட்சிக்கு தூண்களாக திகழ்கின்றனர். நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் அநீதி இழைக்கப்படு கிறதோ அப்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.

    எங்கள் தலைவருடைய நாடாளுமன்ற உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்திலே மக்கள் மனதிலே நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களேயன்றி தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல என்பதை தமிழிசை புரிந்து கொண்டு இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.
    • அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    புதுச்சேரி:

    லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.

    பிறந்த நாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார்.

    பின்னர்,எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

    அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் எ.வி. சுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    பிறந்தநாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 மற்றும்12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, கமலா அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    மேலும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்கப்பட்டது.

    ×