என் மலர்
நீங்கள் தேடியது "a raja"
- இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான்.
- இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.
இன்று திமுக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு திமுக எம்.பி. ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?
உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.
ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
- அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வக்வு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த பாராளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த மாதம் பாட்னா, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய 3 நகரங்களிலும் கருத்துகளை கேட்டது. அதனை கூட்டுக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடியும் முன்பே பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எதிர் கருத்துகளை குழுத்தலைவர் நீக்கியுள்ளது குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது அரசு சார்பில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து 150-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் குரல் எழுப்பினோம்.
இந்த நிலையில், நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கருத்துகள் நீக்கப்படவில்லை என மாநிலங்களவையில் பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி பேசியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் மத்திய அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.
அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியானால் நீக்க உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதா, பாராளுமன்றத்தில் மசோதா விவாதத்துக்கு வரும்போது கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது.
- கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.
ஊட்டி:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட தி.மு.க. சார்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர்.
இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. நேற்று மாலை. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. நீலகிரி வரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவும் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றும் அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்து மதத்தினரைப்பற்றி ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
தி.மு.க கொள்கை பரப்பு செயலாளாராக இருப்பவர் ஆ.ராசா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மதத்தினரைப்பற்றி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் நிலையங்களில புகார் அளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் ஆ.ராசா உருவபடத்தை வைத்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து அதனை வீடியோவாக எடுத்தனர். மேலும் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் சிலர் எழுப்பி அதனை சமூகஊடகங்களில் வெளியிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவர்கள் அந்த படத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் மூலம் ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துதே குறிக்கோள்.
இந்து மதம் குறித்த திமுக எம்.பி.ஆ.ராசாவின் பேச்சை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Sorry state of political discourse in Tamil Nadu. @arivalayam MP has yet again spewed hatred against one community with the sole aim of appeasing others.
— K.Annamalai (@annamalai_k) September 12, 2022
Very very unfortunate mindset of these political leaders who think they own Tamil Nadu. pic.twitter.com/UntspDKdQ3
அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
- 2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் ஏலம் விடப்பட்டது.
- 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது.
புதுடெல்லி :
டெல்லியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும் இருக்கக்கூடாது என ஏன் ஒரு சட்டத்தை வகுக்கக்கூடாது? என கேட்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைமத்திய வனத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார்.
5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது.
2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.
2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.
இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?. ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும்.
இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார். விழாவில் ஆ.ராசா பேசியதாவது:-
மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன். ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.

இப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.