என் மலர்
நீங்கள் தேடியது "Aadhaar Number"
- தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர்
நெல்லை:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
சிறப்பு முகாம்கள்
கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எளிதாக ஆதார் எண்ணை இணைப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகிறார்கள்.
நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் வருகிற 31-ந் தேதி வரை நடத்தபட உள்ளது.
81 சதவீதம் பேர்
பொங்கல் பண்டி கையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்க ளாக சிறப்பு முகாம்கள் நடத்தப் படவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சிறப்பு முகாம் தொடங்கியது.
இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் நுகர்வோர்கள் உள்ளனர். இன்று காலைவரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர். இது 81.21 சதவீதமாகும்.
- 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார்.
- தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புனித செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தின்போது வட்டார அளவில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினம் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு, தனக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்.28-ல் உள்ள வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார். அவருக்கு பாராட்டு சான்றிதழை வட்டாட்சியர் சாந்தி வழங்கினார். அவருடன் இணைந்து சிறப்பாக பணிபுரிந்த இதர அலுவலர்கள் 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது
இதில் மண்டல துணைதாசில்தார் சிவராமன், தேர்தல் பணி தாசில்தார் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மற்றும் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
- 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
15-ந் தேதி வரை நீட்டிப்பு
இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31-ந் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்ப ட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். இன்னும் குறைந்த அளவிலான பொது மக்களே ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீதி உள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
100 சதவீதம் நிறைவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஆதார் இணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி கூறியபோது, நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 114 மின் நுகர்வோர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று 31-ந் தேதி வரை தங்கள் ஆதார் எண்களை 100 சதவீதம் இணைத்துள்ளனர்.
இதற்காக பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
- நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
- 7 கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வாயிலாக ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
11 லட்சம் மின் இணைப்பு
தமிழகத்தில் அதிகமான மின் நுகர்வோர்களை கொண்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்த வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 722 ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் முதல் நெல்லை கிராமப்புற கோட்டம், நகர்ப்புற கோட்டம், தென்காசி கோட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கடையநல்லூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், வள்ளியூர் கோட்டம் ஆகிய 7 கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.
புதுப்பிக்கும் பணி
இந்த பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு மின்வாரியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்த பிறகு மின் நுகர்வோர் புதிதாக வீடு மாறினாலும், சொந்தமாக வீடு வாங்கினாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்கள் படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.
இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், அவர்கள் படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
- 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.
தாராபுரம் :
வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.
'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.
2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவ லகத்தில் தபால்துறை அலுவலர்களால் நடத்தப்ப டும் சிறப்பு முகாமிற்கு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்ட செல்போன், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்று ஆகிய வற்றுடன் நேரில் வந்து விவசாயிகள் தங்களது விபரங்களை சரி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம்:
பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்.
- பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம்.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம்.
ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
- தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.
ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு கூறியிருப்பதாவது:-
தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்.
தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேணடும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன.
- 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
பல்லடம் :
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.இதன்படி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலை பள்ளி வாக்கு சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்த கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி-யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது.
- இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூ ராட்சியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி-.யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ள படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்க அலுவலர்களிடமும், அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
பொத்தனூர் பேரூ ராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.