என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "accident killed"
வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வெகுநேரம் ஆகியும் பனிமூட்டம் விலகாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே மெதுவாக செல்ல வேண்டி உள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் பனி மூட்டத்தால் விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டத்திற்கு மத்தியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இரண்டு சொகுசு கார்கள் மீது மோதியது. அம்பாலா அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு தொங்கனகிரி முதல் வீதியை சேர்ந்தவர் சதிஷ். இவரது மனைவி விஜயா (27). இவர்கள் 2 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மாலை விஜயா வேலை முடிந்து தனது கம்பெனியில் வேலை பார்த்து வரும் ரமேஷ் குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
பூண்டி பகுதியில் வந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க ரமேஷ் குமார் பிரேக் பிடித்தார். இதனால் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.
விஜயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் வீரபாண்டி இடுவாய் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராஜ் கமல் (19). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மேஸ்திரியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
இடுவாய் - திருப்பூர் சாலையில் வஞ்சிப்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து இடுவாம்பாளையம் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்கமல் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவர் தனியார் கூரியர் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இதே வேனில் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த சிவபெருமாள் மகன் சந்தோஷ்குமார் (21) கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சரவணன் (22) என்பவரை உதவிக்கு உடன் அழைத்து வந்தார்.
நள்ளிரவு சேலத்தில் இருந்து கூரியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. வேனை ராமலிங்கம் ஓட்டினார். அருகில் உள்ள இருக்கையில் கிளீனர் சந்தோஷ்குமார், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர்.
கூரியர் வேன் போகும் வழியில் ஒவ்வொரு இடங்களாக நிறுத்தி, பார்சல்களை கூரியர் அலுவலகங்களில் ஒப்படைத்தப்படி சென்று கொண்டிருந்தது.
கூரியர்வேன் இன்று அதிகாலை 6.25 மணிக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றது.
அப்பேது பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரைக்கு 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த லாரியின் பின்பக்கத்தில் கூரியர் வேன் எதிர்பாராதவிதமாக டமார் என பயங்கரமாக மோதியது. இதில் வேன் டிரைவர் ராமலிங்கம், கிளீனர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலை, முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிப்பட்டு இருக்கையிலேயே பலியாகினர். சரவணன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
வேன் கண்ணாடிகள் உடைந்து சிதறி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரியை நிறுத்தி வைக்கக்கூடாது என நாமக்கல் போக்குவரத்து போலீசார் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதையும் மீறி டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். மேலும் அவர் அந்த லாரியில் தூங்கிக் கொண்டும் இருந்துள்ளார். விபத்து ஏற்பட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், வேன் டிரைவர் ராமலிங்கம் சரியாக தூங்கி ஓய்வு எடுக்காமல் இரவு வேனை ஓட்டி இருக்கலாம். அதனால் தூக்க கலக்கத்தில் இன்று அதிகாலை லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார் என சந்தேகப்படுகிறோம் என்றனர்.
விபத்தில் ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோர் பலியான தகவல் அறிந்து உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சோகத்துடன் கூடியுள்ளனர். #accident
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் சுக்கா லியூரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றனர்.
கரூர்-சேலம் தேசியநெடுஞ் சாலையில் மூலிமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார். விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர்:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மகன் விக்னேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக் (வயது 19). இருவரும் நண்பர்கள்.
கார்த்திக் கோவையில் பணியாற்றி வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவர் நேற்றிரவு கோவைக்கு புறப்பட்டார்.இதையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக விக்னேஷ், கார்த்திக்கை மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு துறையூருக்கு சென்றார்.
உப்பிலியபுரம்-துறையூர் இடையே சிக்கத்தம்பூர் பட்டாங்கோவில் அருகே செல்லும் போது, அந்த வழியாக சிறுகாம்பூர் செங்கொடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), அவரது மனைவி செல்வி (25) மற்றும் உறவினர் கிருப , 1½ வயது குழந்தை சுபஸ்ரீ ஆகியோர் ஒரு மொபட்டில் உப்பிலியபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.
உடனே சம்பவ இடத் திற்கு உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த விபத்தில் குழந்தை சுபஸ்ரீ லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கர்நாடக மாநிலம் மங்களாபுரத்தை சேர்ந்த 18 பேர் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு ஜீப்பில் வந்தனர். விசேஷம் முடிந்து நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர்.
இன்று காலை காசர்கோடு அருகே உள்ள உப்பளா என்ற இடத்தில் வந்தபோது எதிரே மங்களாபுரத்தில் இருந்து காசர்கோட்டுக்கு சரக்கு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த லாரி ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஜீப்பில் இருந்தவர்களை மீட்டபோது சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள்.
மற்றவர்கள் படுகாயத்துடன் அலறி சத்தம்போட்டனர். காசர்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தன்.
இதில் 3 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் மங்களாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை முதலே கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் உடனே தெரியவில்லை. இது குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 31). சாயப்பட்டறை உரிமையாளர். இவரிடம் வேலை பார்த்தவர் முருகேசன் (31). இவர்கள் 2 பேரும் மேலும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40), விஜயகுமார் (31), நிஷாந்த் (23) என 5 பேரும் ஒரு காரில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் நடந்த ஒருதிருமண விழாவில் பங்கேற்க சென்றனர்.
திருமண விழா முடிந்த பிறகு அதே காரில் அவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த கார் சத்தியமங்கலம் அருகே முருகன்மேடு என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் சாயப்பட்டரை உரிமையாளர் சரவணகுமார் மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான 2 பேருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
ஒட்டன்சத்திரம் அருகே கோதையெறும்பை சேர்ந்தவர் முனியப்பன் (வயது21). மில் தொழிலாளி. வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சாலையோர பாலத்தில் தூங்கினார்.
அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் கீழக்கரைகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (28). திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அய்யலூர் புத்தாநத்தம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்பூருக்கு கூலி வேலைக்கு தினசரி ஆட்கள் சென்று வருகிறார்கள்.
இவர்களை ஏற்றி செல்வதற்காக தனியார் நிறுவனம் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இந்த பஸ் காலையில் ஆட்களை அழைத்து சென்று பின்னர் மாலையில் அவர்களது ஊருக்கு வந்து விடுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிய வேன் தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. 4 ரோடு பிரிவில் சென்ற போது வேன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் டிரைவரை கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளதில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி தேவத்தூரை சேர்ந்த வீரம்மாள் (வயது 50), பொருளூரை சேர்ந்த ரேவதி (35) ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பூண்டி அருகே உள்ள வேள்ளாத்துகோட்டை ரெட்டி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவரது உறவினர் மகன் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதையடுத்து வெங்கல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க அவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
சீத்தஞ்சேரி - வெங்கல் நெடுஞ்சாலையில் கல்பட்டு கிராமம் திம்ஸ்மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெங்கல் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பளூர் வாளகுடியை சேர்ந்தவர் தனபால் (வயது 61). இவரது மனைவி பானுமதி. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை ஏலாக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சத்திரத்து ஏரி - ஆண்டவர் கோவில் இடையே செல்லும் போது ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனை ஊழியர் ஞானபிரகாசம் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தனபால் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் தனபால், ஞானபிரகாசம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருமானூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பானுமதி சிகிச்சைக்காக தஞ்சைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருமானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்