என் மலர்
நீங்கள் தேடியது "Accidents"
- திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
- வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வீரபாண்டி:
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருசக்கர வாகன பயன்பாடு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
சிவகங்கை
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இருசக்கர வாகன பயன்பாடு, அதன் அபரிமிதமான விளைவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் விளக்கினார்.
அவர் பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் சட்டப்பிரிவின்படி 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.
இதில் தலைமை ஆசிரியர் சிவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கால் ஆன வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது.
- பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கால் ஆன வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால், அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் தனியார் வாகனங்களும் அத்துமீறி பஸ் நிலையத்திற்குள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன மேலாளர்- மூதாட்டி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- சிவகாசி டவுன், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு வந்த துரைப்பாண்டி மதியம் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ரெயில்வே பீடர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். கிருஷ்ணன் கோவிலில் உள்ள கண் ஆஸ்பத்திரி முன்பு பாண்டியம்மாள் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து நடக்கிறது.
- வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் உள்ள மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைப்பகுதியில் சாலையோரத்தில் தினமும் கனரக லாரிகள் ஏராளமானவை நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் அந்த இடத்தில் எந்த வேகத்தடையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
- நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மதுரை ஏற்குடியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 55). சம்பவத்தன்று இரவு இவர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் பானுமதிக்கு தலையில் அடிபட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (67). இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்றார். பழைய குயவர்பாளையம் சாலையில் சென்றபோது கேரள பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்வர் பாட்ஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக பஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தாளவாடியை சேர்ந்த டிரைவர் ரங்கராஜு (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரை அடுத்த வாவிடமருதூரை சேர்ந்த மணிகண்டன் மகன் ராமசாமி (24). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். புது நத்தம் மெயின் ரோடு, நாராயணபுரம் அருகே- வேகமாக வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே, அவர் பரிதாபமாக இறந்தார்.
மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பஸ்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, உத்தப்பநாயக்கனூர், இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் செல்வத்திடம் (47) விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது,
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் நகரை சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் என பலரை வெறி நாய் கடித்து திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர் எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் நடமாட முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- லட்சுமி நகர் லே-அவுட் பகுதியில் சுமார் 50வீடுகள் உள்ளன.
- வீதியில் ஜல்லிகற்கள் போடப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகின்றன.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 53 வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர் லே-அவுட் பகுதியில் சுமார் 50வீடுகள் உள்ளன. இங்கு 3 வீதிகள் உள்ளன. 2வது மற்றும் 3வது வீதிகளில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வீதியில் ஜல்லிகற்கள் போடப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. தார் சாலை போடப்படவில்லை.இதனால் தினந்தோறும் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து 53வது வார்டு உறுப்பினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பிரிவு பகுதியில், பல்லடம்- தாராபுரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதா கவும், விபத்து க்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று இரவு அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- மணிராஜ் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் ரோடு உ.கீரனூரில் வசித்து வருபவர் மணிராஜ் (வயது 19). இவர் செங்குறிச்சி சுங்கச்சாவடி பால் பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிராஜ், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
- வேகத்தடை, பேரிகார்டுகள் இல்லாததால் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர்.
- பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டின் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகம் ,கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி சாமி கோவில் ஆகிய இடங்கள் உள்ளன. காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இந்த நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே பலமுறை விபத்துக்கள் நடந்துள்ளன, கடந்த மூன்று மாதத்தில் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த பகுதியில் வேகத்தடை, பேரிகார்டுகள் இல்லாததால் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இன்று கை குழந்தையுடன் ஒருவர் இந்த ரோட்டில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் அதிவேகமாக இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முன்னாள் சென்று கொண்டிருந்த வண்டி நிலைகுலைந்து குழந்தையுடன் நடுரோட்டில் விழுந்தனர். குழந்தை கீழே விழுந்ததில் லேசான காயத்தோடு அதிர்ஷ்டவசமாக தப்பினர். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பலமுறை விபத்துக்கள் ஏற்பட்ட இந்த ரோட்டில் வேகத்தடை அல்லது பேரிகாடுகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, எனவே வரும் காலத்தில் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க இந்த நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பேரிகாடுகள் வைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமசுப்புவின் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
- கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி - விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராமசுப்பு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கா மல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துடியலூர் அருகே உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன் (35). வெல்டர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை- தடாகம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.