search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advertising"

    • தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ளார்
    • ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உளளார்

    சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களைக் கொண்டு தங்களின் நிறுவனத்துக்கு விளம்பரம் தேடித் கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பிரபலங்களின் மீது மக்கள் கொண்டுள்ள அளவுகடந்த கிரேஸை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஒலிம்பிக்ஸ் வீரர்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் முகங்களாக முன்னிறுத்தப்படுகின்றனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் பாரீஸ் இருந்த சமயத்திலேயே பல்வேறு பிராண்டுகள் தங்களின் விளம்பரங்களில் நடிக்கும்படி அவரை சுற்றி வலைத்தன. அந்த வகையில் இந்திய ஈட்டியெறிதல் நட்சத்திரமாக விளங்கும் நீரஜ் சோப்ராவையும் பிராண்டுகள் விட்டு வைக்கவில்லை.

     

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் பிராண்ட் வேல்யூ இந்த வருடம் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் 32 முதல் 34 அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உள்ளாராம்.

    • கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக ரூ.36.93 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது
    • கடந்த 3 வருடங்களை விட அதிகமானதாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியமைத்த பின் நாட்டின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் மீது 83 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்தும் இந்த பட்ஜெட் தாக்களாகியுளளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையில் பட்ஜெட்டில் செய்தி மற்றும் ஒளிபரப்புதுறைக்கு ரூ.4,342 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக ரூ.36.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் கலை மற்றும் காலாச்சார மேம்பாட்டுக்கு ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பட்ஜெட்டில் புனேவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு ரூ.87.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்பட கல்லூரிக்கு ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாஜக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக அதிகப்படியான விளம்பரங்கள் உள்ளன. மோடியின் பிம்பத்தை மக்கள் மத்தியில் நிறுவவுவதற்கு ரயில்வே நிலையங்களில் செல்பி பாயிண்ட் உள்டப்பட பல விளம்பர உத்திகள் தொடர்ந்து கையாளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பட்ஜெட்டில் பிரசார் பாரதி, ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்டவற்றின் மூலம் தகவல்தொர்பு மற்றும் விளம்பரத்துக்கு ரூ.1,089 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,078 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை அதிகரித்துள்ளது. கடந்த 3 வருடங்களை விட அதிகமானதாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

     

    • ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு.
    • முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா ஒருபுறம் நாக சைதன்யாவுடன் விவாகரத்து, மற்றொரு புறம் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணங்களால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

    வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஒரு ரசிகர் சமந்தாவிடம் இப்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? என்று கேட்டார்.

    அதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது ''இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை. அதன் பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டேன்.

    இப்போது எதை செய்கிறேனோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுகிறேன்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
    • எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.

    எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.

     

    இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
    • இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன. அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

     

    விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஈகோ நிறுவனத்தின் இயக்குனர் பாவேஷ் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில், அந்த விளம்பரப் பலகையை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றே குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அரசின் அலட்சியத்தாலேயே 14 உயிர்கள் பலியாகி உள்ளதாக பலரும் கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
    • கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

    இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசார வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்நிகழ்வில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இணையதள விளம்பரத்தை நம்பி பட்டதாரி பெண் ரூ.1.21 லட்சத்தை இழந்தார்.
    • இன்ஸ்டாகிராமில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சோ்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சரண்யா (வயது27). இவா் பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

    இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமிற்கு கடந்த ஜூலை 26-ந் தேதி, இணையதளம் மூலம் பகுதி நேர வேலையில் சேர்ந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை படித்தவர் அதில் இருந்த லிங்கை கிளிக்கை செய்த போது சரண்யாவின் செல்ேபானுக்கு ஏஞ்சலா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது.

    அதில் வேலைக்கு சேர நுழைவுக்கட்டணமாக பணம் செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய சரண்யா குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 வரை செலுத்தியுள்ளாா்.

    அதன் பிறகு சரண்யாவின் இணையதள கணக்கில் ரூ.1.86 லட்சம் இருப்பு இருப்பதாக காட்டியுள்ளது. இதனை நம்பி அந்தப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    வேலைக்கு சேர நினைப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அந்த இருப்பு கணக்கை மோசடி நபர்கள் காட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றதப்பட்டதை உணர்ந்த சரண்யா ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    ×