என் மலர்
நீங்கள் தேடியது "Advocates"
- வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சங்க வளர்ச்சி, பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வரவு,செலவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மீண்டும் வள்ளுன்நம்பி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளராக சேகர், இணை செயலாளராக சுகுமார், பொருளாளராக சிவராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பொறு ப்பாளர்களுக்கு வக்கீல்கள் பொன்னடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயிலில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ராஜு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், வக்கீல்கள் குடந்தை ராஜன், சதாசிவம், ராஜ்குமார், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைகண்டித்து கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் வக்கீல்கள் சௌந்தர்ராஜன், மதியழகன், சின்னமணி, சிகாமணி, பாஸ்கர், பிரபு, செபாஸ்டின், ஆனந்தராஜ், காஜாமைதீன், சுபாஷ் சந்திர போஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் பழனியப்பன், வல்லம் பேரூர் தலைவர் முகமது பாட்ஷா, கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், மக்கள் நல பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உறந்தை மனோகரன், மானம்புசாவடி பிரபாகர், மாவட்ட சேவா தளம் திருஞானம், கோமதி, தொழிற்சங்கம் நிர்வாகி சந்திரசேகர், கண்ணன், இனாத்துகன்பட்டி ராமலிங்கம், நிர்வாகி மகேந்திரன், விசிறி சாமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
- போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- இலவசமாக சேவைபுரிய குற்றவியல் வக்கீல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
- தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வசதியற்ற வா்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்குரை ஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மாா்ட்டின் திறந்து வைத்து பேசியதாவது:
வசதி இல்லாதவா்கள் தங்களுடைய குற்றவியல் வழக்குகளைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் வழக்காட, எதிா் வழக்காட, பிணையில் எடுக்க ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை புரிய குற்றவியல் வழக்குரைஞா்கள் தோ்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனா். இவா்களை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட, அனைத்து வட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இம்மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல், சாா்பு நீதிபதியும், மையச் செயலருமான இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
- வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடை பெற்ற போராட் டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
கலந்து கொண்டவர்கள்
மறியலில் துணைத் தலைவர் சீதா, வக்கீல்கள் மணிகண்டன், லெட்சு மணன் ரமேஷ், அருள்ராஜா, விஜயன், சுரேஷ், பால சுப்பிரமணியன், சிதம்பரம், மகேஷ், இசக்கிபாண்டி, அருள்பிரவின், சுதர்சன், மகாராஜன், முத்துராஜ், பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பி னர். போராட்டத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
- போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
- 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
புதுக்கோட்டை
ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
- மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
- சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அந்த பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக சென்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அமைத்து, மத்திய அரசு புதிதாக தோற்றுவித்த புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடியிலுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாழப்பாடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரவியம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், மத்திய அரசின் புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.
- சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.