search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural work"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
    • வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

    ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

     

    • உடன்குடி வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட 17 ஊராட்சி மன்ற பகுதிகள் மற்றும் ஒரு நகரப் பகுதிகள் உட்பட சுமார் 5,000 ஏக்கரில் பல்வேறு விவசாயம் ஆண்டு தோறும்நடைபெறுவது வழக்கம்.
    • தொடர்மழை மற்றும் சாரல் மழை விட்டு விட்டு பெய்வதையொட்டி இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது புதிய நடவு விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    உடன்குடி:

    கோடைகாலத்தில் வழக்கமாக தென்னை, பனை, முருங்கைஆகியவற்றை பராமரித்து வருவார்கள். ஆனால் புதியதாக மழைக்காலம் ஆரம்பித்த பின் தான் நடவு செய்வார்கள்.

    தற்போது தொடர்மழை மற்றும் சாரல் மழைவிட்டு விட்டு பெய்வதையொட்டி இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள்தங்களது புதிய நடவு விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். புதியதாக தென்னை, பனை, முருங்கை, வாழை, சப் போட்டா, கடலை மற்றும் ஊடுபயிர்கள் எனபல பயிரிட ஆரம்பித்து விட்டனர். இதற்காகவிவசாய நிலங்களில் உள்ள வேண்டாத செடி, கொடிகளை அப்புறப்படுத்தி விட்டு நிலத்தை கொத்தி பக்குவப்படுத்தி புதியதாக நடவு செய்து விவசாய பணிகளை பல இடங்களில் தொடங்கி உள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை , அய்யலூர், எரியோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது.
    • நெற்கதிர்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை , அய்யலூர், எரியோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது.

    இதனைதொடர்ந்து அழகாபுரி, கூம்பூர், மல்லபுரம், குஜிலியம்பாறை, வடமதுரை, அய்யலூர், பூத்தம்பட்டி , கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் சொர்ணவாரி எனப்படும் தை மாதம் பட்டம் அறுவடை செய்யும் வகையில் நெல் நாற்றுகள் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் குலவை சத்தத்துடன் தெம்மாங்கு பாடல் பாடி வயல்வெளியில் உற்சாகமாக நடவு பணி மேற்கொண்டனர்.

    வேடசந்தூர் பகுதியில் ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64, ஐ.ஆர்.36, எனப்படும் ரகங்கள் அதிக அளவில் மகசூல் கிடைக்கும் வகையில் விளைகின்றன. இதனால் இந்த ரக நெற்கதிர்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    • அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும் கலந்துரையாடினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வேப்பம்பட்டி பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.4,22,500 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைகுடிலில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிக்காய் பயிர்களையும், ரூ.30,000 அரசு மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி மற்றும் கொய்யா பயிர்களையும், ரூ.35,000 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசனத்திட்டப் பணிகள்,

    தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.60,000 அரசு மானியத்தில் பந்தலில் பாகற்காய் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும், ரூ.80,0000 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பாகற்காய் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை, மகசூல், மற்றும் வருவாய், அவர்களது வாழ்வாதாரம் குறித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும் கலந்துரையாடினார்.

    மேலும், தேனி வட்டத்திற்குட்பட்ட கோட்டூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.

    இதேபோல் பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டபணிகளை பார்வையிட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
    • பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் வெள்ளக்கால் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் தலா 45,000 வீதம் மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.தொடர்ந்து பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசுப்பிரமணியன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேதுராமலிங்கம், துணை அலுவலர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தாமஸ், மாரியம்மாள், ரமேஷ், செய்யது அலி பாத்திமா, குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரன், முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    நவீன தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டை நம்பி உள்ளனர். குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் தண்ணீர் இல்லை. மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயத்திற்கு தேவையான பருவ மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகள், உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    தற்போது மாவட்டத்திற்கு ரூ.200 கோடி பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதில் ரூ.105 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒருசில இடங்களில் பயிர் இழப்பீட்டு தொகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சென்னை சென்று, அதை சரி செய்தனர்.

    தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் சிவகங்கை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தண்ணீர் இன்றி நாம் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது. அதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யம் தொழில் நுட்பங்களை தற்போது வேளாண்மைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவைகளை விவசாயிகள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மானியத் திட்டத்தில் ரூ.12.55 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். இதில் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், துணை இயக்குனர்கள் ராஜேந்திரன், சசிகலா, இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×