என் மலர்
நீங்கள் தேடியது "Akhilesh Yadav"
- அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
- தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள்.
ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.
பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
- நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.
ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.
நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.
நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"
- விலைவாசி உச்சத்தில் உள்ளது.
- வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி :
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
'வருகிற 2024-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசை அமைப்பதற்கான தொடர் நடவடிக்கை தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேத்கரால் அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலைவாசி உச்சத்தில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாற்று அரசு அவசியமாக உள்ளது.
உத்தரபிரதேச மாநில மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வளமை, மேம்பாட்டின் பாதையில் இம்மாநிலம் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எந்த நிலையில் உள்ளது?
மாநிலத்தில் 5 ஆண்டுகால ஆட்சியைக் கடந்தபிறகுதான் முதலீட்டாளர்களை பா.ஜ.க. அழைக்க வேண்டுமா? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?'
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
அவரது மாமனாரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மரணத்தால் காலியான மெய்ன்புரி தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வென்றார்.
இந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்ற டிம்பிள் யாதவ், பின்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், மக்களவை முன்வரிசைத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.
டிம்பிள் யாதவின் கணவரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து மனைவி பதவி ஏற்பதை பார்த்தார்.
- உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
- காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார்.
தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார்.
உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார்.
- அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் எனக்கூறி குடிக்க மறுத்துவிட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுவிக்கும்படி கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் நேற்று சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றுள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரியான அவருக்கு போலீஸ் அதிகாரிகள் குடிக்க தேநீர் கொடுத்தனர். ஆனால், உங்களுக்கு (தொண்டர்களிடம்) தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் வைத்து விடுவார்கள். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்துக் கொள்வேன். உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார்.
அதன்பின், காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக் கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- கொல்கத்தாவில் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
- மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.
கொல்கத்தா:
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இந்த கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமான தூரத்தில் வைக்க வேண்டும் என்றே இந்த தலைவர்கள் விரும்புகின்றனர்.
- இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும்.
- நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும்.
லக்னோ :
சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்காக தத்தமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும். அக்கூட்டணி, பா.ஜனதாவுக்கு எதிராக மோதும். அதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.
பல மாநிலங்களில் மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன. அங்கெல்லாம் களத்திலேயே காங்கிரஸ் இல்லை. மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுடன் மோதுகின்றன.
பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் கோருவது உண்மைதான். அக்கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன.
இது ஒரு பெரிய போர். இதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக யார் செயல்படுவது என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அது இப்போது பொருத்தமான கேள்வி அல்ல.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், உத்தரபிரதேசத்தில் வெற்றிபெற வேண்டும். ஆனால், உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும். அதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அமேதியில் எங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு காங்கிரசார் ஆதரவாக நிற்பது இல்லை. எங்கள் தொண்டர்களே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
- நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.
புதுடெல்லி:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.
கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.
43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.
இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.
ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி ஜூன் 12-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள்.
என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.
என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.
மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
- வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
சென்னை:
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.
- உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸூக்கு முன்பே இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ரஜினி சென்றார்.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.
இதையடுத்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த், "9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்" என்றார்.