search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alone"

    • நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இறந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என தெரியவந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என்பதும், அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதும் தெரிய வந்தது.

    ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர். 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தென் மாவட்ட அளவில் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஐ.எஸ்.எம். நிறுவனம் சார்பில் மதுரையில் நடந்தது. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங் களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனோகரிதாஸ் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தனித்து வாழும் பெண்கள் நலவாரிய உறுப்பினர் கிளாரா கலந்து கொண்டு பேசுகையில், தனித்து வாழும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி, கல்விக் கேற்ற வேலை வாய்ப்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜீவானந்தம், செல்வகுமார், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தனித்து வாழும் பெண்க ளுக்கான நலவாரியத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும் என கருத்த ரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முன்னதாக தனித்து வாழும் பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை கிளாரா வெளியிட மனோகரிதாஸ் பெற்று கொண்டார்.மாக்ஸின் வரவேற்றார். கஸ்தூரி நன்றி கூறினார்.

    • சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே இரவில் தனியாக சுற்றி திரிந்த 10-ம் வகுப்பு மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    சேலம்:

    சேலம் பட்டர் பிளை மேம்பாலம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் 15 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிந்தார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கு நின்ற லாரி டிரைவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தாய் இறந்து விட்டதாகவும், தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து மாணவியை மீட்ட ேபாலிசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection
    சேலம்:

    சேலத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் குற்றவாளி என்பதால் நினைவிடம் கட்டக்கூடாது எனவும், உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்று இருப்பார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டு வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி எனக்கூறி கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

    இவ்வாறு பேசியவர்களுடன் கூட்டணி வைக்கும் இவர்களை (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

    இந்த கூட்டணி பலவீனமான கூட்டணி. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். அவர்களின் கூட்டணி தற்கொலைக்கு சமமான கூட்டணி. அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பு தோற்றுப்போகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் இவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.



    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சமூகநீதி போராளிகள் என்று நினைத்தேன். அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் பா.ம.க.வினர் என்ன நினைப்பார்கள்? என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றாக சேர்ந்துள்ள இவர்கள் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள்.

    அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர். எங்களுக்கு கிளைகள் இல்லாத ஊர் எதுவும் இல்லை. அந்த வகையில் கட்சியை வளர்த்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பிரதமர் யார்? என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection

    பிள்ளைகளால் கைவிடப்பட்ட பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். #GeetaKapoor #RIP
    மும்பை:

    ‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார்.



    இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த நடிகைக்கு திரைத்துறையினர் சிலர் உதவி செய்தனர். பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு நேற்று உடல்நிலை சரியல்லாமல் போனது. இதையடுத்து அவர் கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நடிகை கீதா கபூருக்கு வயது 57.  #GeetaKapoor #RIP
    ×