என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம்
- தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது.
- 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
தென் மாவட்ட அளவில் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஐ.எஸ்.எம். நிறுவனம் சார்பில் மதுரையில் நடந்தது. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங் களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனோகரிதாஸ் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தனித்து வாழும் பெண்கள் நலவாரிய உறுப்பினர் கிளாரா கலந்து கொண்டு பேசுகையில், தனித்து வாழும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி, கல்விக் கேற்ற வேலை வாய்ப்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஜீவானந்தம், செல்வகுமார், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தனித்து வாழும் பெண்க ளுக்கான நலவாரியத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும் என கருத்த ரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
முன்னதாக தனித்து வாழும் பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை கிளாரா வெளியிட மனோகரிதாஸ் பெற்று கொண்டார்.மாக்ஸின் வரவேற்றார். கஸ்தூரி நன்றி கூறினார்.