search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumaniramadoss"

    • ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார்
    • குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

    அரசை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன, இதுபற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில் இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கிய பாராளுமன்றகுளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

    அப்போது, ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் முதலில் ஐயாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்துள்ளார்.

    • நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.

    ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் இயற்கை உரத்திற்காக ரூ.17,924, தொடக்கநிலை ஆள் கூலிக்காக ரூ.12,000 என முதல் இரு வாரங்களில் மட்டும் ரூ.39,116 ஏக்கர் ரூ.15,646 செலவாகும் என வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.

    வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் இரு வாரங்களைக் கடந்தவை. அவற்றுக்கும் இந்த மதிப்பீட்டின்படி தான் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல.

    அதுமட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை. அதனால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாகவே கருத வேண்டும். அதை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×