என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "anganwadi workers"
- அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
- கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பாஜக அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகாரில் அவரது சொந்தத் தொகுதியான பெகுசாராய் [Begusarai] தொகுதியில் மனு கொடுக்க வந்தவர்கள் சூழ்ந்ததால் காரில் இருந்து இறங்கி பைக்கில் அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காகத் தனது காரில் வந்துகொண்டிருந்த கிரிராஜ் சிங் பள்ளியை நெருங்கியதும் அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
அவர்கள் தங்களின் மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருக்கியடித்த நிலையில், காரில் இருந்து இறங்கி, பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பினார். இதனால் தங்களது கோரிக்கை மனுக்களைக் கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி ஒன்றி யங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள்,சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பவானி:
பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி வட்டார தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் விஜயாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடியில் அதிகமான பணி சுகாதாரத் துறை பணிகள் செய்யப்ப டுகின்றன. அதனால் தான் அங்கன்வாடி ஊழியர்களு க்கு 42 வயதில் பிஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பதவி உயர்வை வழங்கிட வேண்டும். இல்லை என்றால் சுகாதாரத் துறை பணியை கண்டிப்பாக புறக்கணி ப்போம்.
அதிகமாக உள்ள காலி பணிகளினால் ஒரு ஊழியர் இரண்டு மூன்று மையங்களில் பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை உள்ளது.
எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பவானி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் என 50க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் பர்கூர் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் வி.கற்பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி வரவேற்புரை யாற்றினார்.
கூட்டத்தில்1993 அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு மேற்பார்வை யாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் 5 ஆண்டு பணி முடிந்த குரு மைய ஊழியர்களுக்கும் 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,
காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.
ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும்.உள்ளி ட்ட பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம், மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் காய்கறி, உணவு பொருள்களின் செலவீனங்களை ஏற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
- தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்க வேண்டும்.
அவினாசி :
அவினாசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறுகையில், பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்க ளை மினி மையம் ஆக்கு வதையும் ஐந்து குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.தமிழகம் முழு வதும்சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்க வேண்டும்.அங்கன்வாடி மைய மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும்எ ன்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை மு ன்வைத்து அவினாசி- அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலு வலகம் முன்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க ஒன்றிய தலைவர்வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலா ளர் தனலட்சுமி விளக்க உரைஆற்றினார். விசை த்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முத்து சாமி சிறப்புரை யாற்றினார்.இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் கலந்து கொ ண்டனர்.
- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன் வட்டார நிர்வாகி கற்பகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் வரலட்சுமி வரவேற்றார்.
இதில் 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றார்கள்.
அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஜி.பி.எப். பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சார்ந்தபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க பவானி வட்டார கிளை சார்பில் பவானியில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி தலைமை வகித்தார். பவானி வட்டார தலைவர் விஜயால், துணைத் தலைவர் லீலா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அதே போல் தற்போது வட்டார அளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் லட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், லோன் வழங்குதல், பிரதான மையங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு (இன்கிரி மெண்ட்)ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வட்டார தலைவர் உண்ணாமலை, செயலாளர் பொன்மலர், பொருளாளர் புவனேஸ்வரி, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் பாண்டி செல்வி, இணை செயலாளர்களான ஜெயா, கவிதா, வெண்ணிலா மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
- அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும்
- பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
பெரியபாளையம்:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மூன்றாம் கட்ட போராட்டம் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் அகவிலைப் படியை உயர்த்தி தர வேண்டும். செல்போனில் போசான் டிராக்கர் அல்லது டி.என். ஆப்பில் உள்ள வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.உஷாராணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பி.கலைச்செல்வி, செயலாளர் என்.சந்திரா, பொருளாளர் எம்.வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், துணைத் தலைவர் பி.அம்பிகா, துணை செயலாளர் எம்.பொன்மணி ஆகியோர் நன்றி கூறினார்கள்.
- வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஒன்றியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில், வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வித்தியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.
- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இந்திராகாந்தி, ஷீலாராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலா, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரேமா தொடக்க உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி இடமாறுதலை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட்டு உணவு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இந்திய தொழிற்சங்க சங்க மைய மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களில் சுமார் 100 பேர் இன்று டெல்லிக்கு வருகை தந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர். #Modi #AnganwatiWorkers
நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று அறிவித்தார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2,250-ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டது. அங்கன்வாடிகளில் உதவியாளர்களாக வேலை பார்ப்போருக்கு மாதச் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இருவித அங்கன்வாடிகளிலும் சிறப்பாக பணியாற்றுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 மற்றும் ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதுபற்றி அருண்ஜெட்லி கூறும்போது, “நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் பணியாற்றும் 25 லட்சம்பேர் பயன்அடைவார்கள். அவர்களுடைய குறைகள் களையப் படும் விதமாக இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் நெருக்கடி உள்ளபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல் இந்த 50 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது” என்றார். #AnganwatiWorkers #ArunJaitley
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்